Header image alt text

lanka-thilandஇலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில் காணப்படும் இருதரப்பு உறவை புதிய பிரவேசத்திற்கு கொண்டுசெல்வதாக தாய்லாந்து பிரதமர் கூறியுள்ளார்.

பௌத்த நாடுகள் என்ற வகையில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை அனைத்து விதத்திலும் பலப்படுத்திக்கொள்ள முடியும் என கூறியுள்ளார். தாய்லாந்திற்கான விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் அந்நாட்டு பிரதமருக்கு இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். Read more

2முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உலர் உணவு பொதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. இதன்படி சண்டிலிப்பாய் சீரணி நாகபூசனி அம்பாள் ஆலயத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மூன்று குடும்பங்களுக்கு 30,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

1. ம.பிறேமலதா இடைக்காடு வள்ளிபுனம் எனும் முகவரியை கொண்ட இவரின் கணவர் கடந்த யுத்தத்தின் போது இறந்து விட்டார் இவருக்கு இரண்டு பிள்ளைகள் வயது முதிர்ந்த தாய் தந்தையும் இவரது பராமரிப்பில் வாழும் இவர் ஒருவேளை உணவிற்கு கூட கஸ்டபடுவதாக கூறியுள்ளார்.
Read more

?????????????????????????????????????????????????????????

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பிள்ளையான்காடு இந்து மயானத்தில் நடைபெற்று வந்த அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தக் கோரியும், குறித்த மயானத்தைப் பயன்படுவதற்கு அனுமதிக்குமாறுகோரியும் புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று உடுவில் பிரதேச செயலகம் மற்றும் வலி. தெற்குப் பிரதேச செயலகத்திற்குச் சென்று எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்றுக்காலை உடுவில் பிரதேச செயலகத்திற்குச் சென்ற பொதுமக்கள் உடுவில் பிரதேச செயலர் எஸ்.நந்தகோபாலனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். Read more

unhcr-philipo-grantiஇலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட உள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஆணையாளர் பிலிப்போ க்ரான்டி இதனைத் தெரிவித்துள்ளார். நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்கள் உதவுதல் மற்றும் இடம்பெயர் மக்களுக்கு நலன்களை வழங்குதல் போன்ற பணிகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடற்றதன்மையை இல்லதொழிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

pujitha jayasundaraபொதுமக்கள் வழங்கும் மிகவும் முக்கியமான முறைப்பாடுகளுக்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவார்களாயின், அது தொடர்பில் தனது தனிப்பட்ட அலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நேற்று அறிவித்துள்ளார்.

ஏதாவது முக்கியமான விடயங்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்களம், நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது என, பொதுமக்கள் எண்ணினால், 0718592020 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அழைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். Read more

lanka-girlsஇலங்கை இளம் யுவதிகள் இருவர் ஓமான் நாட்டில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

தத்தமது குடும்பத்தினருடன் சுற்றுலா மேற்கொண்டிருந்த இரண்டு இளம் யுவதிகளும், செல்பி எடுக்க முயற்சித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வழுக்கி கீழே விழுந்ததையடுத்து, குறித்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் மற்றைய பெண் ஈடுபட்டுள்ளார். Read more

accidentமட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்றுகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் வி.கணேசமூர்த்தி (58வயது) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், களுவாஞ்சிகுடியை சேர்ந்த வடிவேல் கிருஸாந்த் (18வயது) என்னும் இளைஞன் படுகாயமடைந்துள்ளார். Read more

sfeவவுனியா அலகல்ல அலுத்கம காட்டுப்பகுதியில் இருந்து இன்று காலை ஆர்.பி.ஜி ரக குண்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

அலகல்ல, அலுக்கம காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதோரால் நேற்று தீ வைக்கப்பட்டுள்ளதுடன் இரவு வேளை பாரிய குண்டுச்சத்தம் கேட்டுள்ளது. அதனையடுத்து, குறித்த பகுதிக்கு இன்றுகாலை பிரதேச மக்கள் சென்று பார்வையிட்டதுடன், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். Read more

sword-cutயாழ் நாவற்குழி பகுதியில் நேற்று இரவு, குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கதிர்காமன் சந்திரசேகரன் (வயது 42) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். Read more

studentவவுனியா கணேசபுரம் பகுதியிருலுள்ள விநாயகர் வித்தியாலயத்தின் மாணவி ஒருவருக்கு நேற்று பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று அதிகாலை குறித்த மாணவிக்கு வீட்டில் படுத்திருந்தவேளை பாம்பு கடித்துள்ளது.

எனினும் . கடித்தது பாம்பு என்று தெரியவரவில்லை. நேற்று பகல் 11 மணியளவில் மாணவிக்கு வாந்தி, வயிற்றுவலி என்பன தொடங்கியுள்ளது. உடனடியாக வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். Read more