lanka-thilandஇலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில் காணப்படும் இருதரப்பு உறவை புதிய பிரவேசத்திற்கு கொண்டுசெல்வதாக தாய்லாந்து பிரதமர் கூறியுள்ளார்.

பௌத்த நாடுகள் என்ற வகையில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை அனைத்து விதத்திலும் பலப்படுத்திக்கொள்ள முடியும் என கூறியுள்ளார். தாய்லாந்திற்கான விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் அந்நாட்டு பிரதமருக்கு இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா உறவை பலப்படுத்த எதிர்காலத்தில் பல வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாக தாய்லாந்து பிரதமர் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இலங்கைக்கு தாய்லாந்து வழங்கும் உதவிகளை மதிப்பதாக கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்டசரிவு காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வழங்கிய உதவிகளுக்காக நன்றிகளையும் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான விவசாயத்துறை உறவை பலப்படுத்துவது குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.