Header image alt text

sssயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த சம்பவத்தைக் கண்டித்து, வடக்கில் எதிர்வரும் 25ம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட்,, ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆகிய ஏழு கட்சிகள் கூட்டாக இந்த அழைப்பை விடுத்துள்ளன.

கடந்த 21ம் திகதி யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக இன்றையதினம் மாலை 3.30க்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 4 அங்கத்துவ கட்சிகளும் மேலும் மூன்று கட்சிகளும் இணைந்து அவசர கலந்துரையாடல் ஒன்றை மாலை 5.30 மணிவரையில் நடத்தியிருந்தன. Read more

sfdகொழும்பு மட்டக்குளிய பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த அறுவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் நால்வர் உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த ஏனையோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

iran-sri-lankaஇலங்கை வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் நேற்று நாட்டை வந்தடைந்தார். இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார செயலாளர் நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ranilபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிவில் அமைப்புக்களுக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கும் சிவில் அமைப்புக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையை தீர்க்கும் நோக்கில், பிரதமர் அந்த அமைப்புக்களுடன் சந்திப்பை நடத்தவுள்ளார். Read more

kajan-funeralபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று இரணைமடு பொது மயானத்தில் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொள்ள இறுதி ஊர்வலம் இடம்பெற்றது. Read more

deerசுன்னாகம் பகுதியில் இனந்தெரியாத இளைஞர் குழு நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் பொலிஸார் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்றுபகல் 2மணியளவில் சுன்னாகம் நகருக்குள் இரு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஆறுபேர் கொண்ட குழு, சுன்னாகம் பகுதியிலுள்ள பிரபல்யமான பல்பொருள் அங்காடிக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்து வர்த்தக நிலைய உரிமையாளரை வெட்ட முயன்றுள்ளனர். Read more

kilaliயாழ். கிளாலிப் பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலசுப்பிரமணியம் -பகீரதன் (வயது 38) என்பவரே படுகாயமடைந்தவராவார். படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

arrestமட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட 7 பேர் இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு-திருகோணமலை வீதியில் சிவகீதா பிரபாகரனால் நடத்திச் செல்லப்பட்ட விடுதியொன்றில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக சந்தேகிக்கப்பட்டே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். Read more

sivagnanasothyமீள்குடியேற்றத்திற்கென வடக்கில் நிர்மாணிக்கப்படும் வீடுகள், நவம்பர் 15ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அமைச்சினால் முன்னெடுக்கப்படும் 11ஆயிரம் வீட்டுத்திட்டத்தின்கீழ், எதிர்வரும் நவம்பரில் 5000 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி கூறியுள்ளார். இவற்றில் 1000 வீடுகள் ஏற்கனவே பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும், மிகுதி வீடுகளை பூர்த்திசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். Read more

maithripala_sirisenaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த சில வாரங்களில், தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த விஜயத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார். அடுத்த மாத இறுதியில் அல்லது டிசெம்பர் மாத தொடக்கம் ஜனாதிபதியின் ஈரானுக்கான பயணம் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more