Header image alt text

sddsdபொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மூன்றாம் வருட மாணவன் விஜயகுமார் சுலக்சனின் பூதவுடல் இன்றுமாலை யாழ் உடுவில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாணவனின் சொந்த ஊரான கந்தரோடைப் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் இன்று இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சமய கிரியைகள் இடம்பெற்றதன் பின்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் மாணவனின் பூதவுடலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெரும் திரளான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.  Read more

d-sithadthan-m-pயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.

பல்வேறு இன்னல்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் தமது இளமைப் பராயக் கல்வியை தொடர்ந்து, பல்கலைக்கழக அனுமதியை பெற்றதால் இனி ஒரு வளமான எதிர்காலத்தை தரிசிக்கலாம் என்ற நம்பிக்கைக் கீற்றுடன் இருந்த அந்த மாணவர்கள் படுகொலைக்குள்ளானது மிக்க வேதனைக்கும் கண்டனத்துக்குமுரியது.

சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தி சமூகத்தில் அச்சமற்ற நிம்மதியான சூழலை ஏற்படுத்தும் கடப்பாட்டைக் கொண்டுள்ள பொலிசார், பொறுப்பற்ற விதத்தில் துப்பாக்கிச் சூட்டை நடாத்தி இரு இளம் உயிர்களை பலி கொண்டுள்ளார்கள் என்றே கருதவேண்டியுள்ளது. Read more

jaffna-universityயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜர் கையளிப்புடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த மகஜரானது யாழ். பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர் ஒன்றியத் தலைவர்களினால் யாழ் அரசாங்க அதிபர் மற்றும் வட மாகாண ஆளுனர் சார்பாக அவரது பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டு அவர்கள் ஊடாக ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் போராட்டம் அமைதியான முறையில் முடிவுற்றது. Read more

vavniayயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் இன்றுகாலை 10.00மணி முதல் 12.00மணிவரை வளாகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சட்டப் பிரதிநிதிகளது முழுமையான பங்குபற்றுதலோடு பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும், கொலையை விபத்தாக காட்ட முனைந்தமைக்கான பொலிசாரின் சட்டத்திற்கு முரணான முயற்சியை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு முழமையாக விசாரிக்க வேண்டும், மனித உரிமை ஆணைக்குழு உள்ளுர், Read more

kilinochchiபொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவர்களுக்கு நீதி கோரியும் இன்றுகாலை கிளிநொச்சியில் கண்டனப் பேரணி இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இப்பேரணி, கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்ததுடன் பொலிஸ் அராஜகம் ஒழிக, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது. Read more

eastகிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்றுகாலை 10.30 அளவில் கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முன்பாக ஒன்று திரண்ட மாணவர்கள் யாழில் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். Read more

peradeniyaயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கலஹா சந்தியில் இன்று இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது. இனவாதத்தை தூண்டி ஆட்சியதிகாரத்தை தக்க வைக்கும் முயற்சி என அவர்கள் தமது கண்டனத்தின்போது தெரிவித்துள்ளனர். பேராதனைப் பல்கலைக் கழக அனைத்து பீடங்களினதும் சுமார் 1000 மாணவர்கள் இதில் பங்கு கொண்டிருந்தனர்.

chennaiதமிழகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மே 17 இயக்கத்தினர் இன்று முற்றுகையிட்டனர்.

யாழ்ப்பாணத்தில்இரண்டு தமிழ் மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. Read more

ekneligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முதலாவது மற்றும் மூன்றாவது சந்தேக நபர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவிசாவளை மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளது. பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேக நபர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்திருந்ததுடன், இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

courtsகைதுசெய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு பேரை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று பிற்பகல் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது திருமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள முன்னாள் மேயரின் வீட்டின் ஒரு பகுதியில் இருந்து இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். Read more