முஸ்லிம் மக்கள் மத்தியில் காணப்படும் ஐயப்பாடுகளை போக்கும் விதத்திலும் அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலும் வடக்கு, கிழக்கு இணைப்புக்கான உடன்பாடுகளை காண்பதற்காக அவர்களுடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வமாகவுள்ளது என்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற யோசனை, புதிய அரசியல் அமைப்பைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிரதான வழி நடத்தல் குழுவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் அவரிடம் கருத்துக் கேட்டபோதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read more