முல்லைத்தீவு மாவட்டத்தின் பாண்டியன்குளம் வள்ளுவர் விளையாட்டுக் கழகம் (கபடி), ஒட்டுசுட்டான் ஆதி கணபதி விளையாட்டுக் கழகம், முள்ளியவளை முல்லைக்குமரன் விளையாட்டுக் கழகம்,
குமிழமுனை ஐக்கிய விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கு 12.10.2016 செவ்வாய்க்கிழமை வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்களால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்கள் தனது வட மாகாணசபை உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் ஊடாக மேற்படி விளையாட்டு உபகரணங்களை விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கிவைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் வீரர்களிற்கு மாகாணசபை உறுப்பினர் தனது ஆதரவினையும் வழங்கியுள்ளார்.