யாழ். கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டு பின்னர் அவர்களில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஐவரும் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, இவ்வாறு உயிரிழந்த இந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுடைய சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். Read more