Header image alt text

img_9614வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் 17.10.2016 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி.மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் கல்விக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் திரு ஜி.ரி. லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ்த்தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான திரு முத்தையா கண்ணதாசன், Read more

14712557_1216530271702104_6465780896257084779_oவவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை கல்லூரியின் அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் வளர்ச்சியிலும், துரித அபிவிருத்தி பணியிலும் பழைய மாணவர்களை உள்வாங்கி, புது உத்வேகத்துடன் கல்லூரியை முன்னணிப் பாதையில் கொண்டுசெல்ல அமைதியான முறையிலும், ஆக்கபூர்வமான கருத்துக்களுடனும் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.
Read more

a3எமது புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் அவர்கள் தனது தந்தை பரஞ்சோதி (17.10.2016) மற்றும் தங்கை ராஜேஸ்வரி (16.10.2016) பிறந்த தினத்தினை முன்னிட்டு

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விழிப்புலணற்ற மற்றும் விசேட தேவைக்குரிய இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு நேற்றையதினம் சிறப்பு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளதுடன். தீபாவளி தினத்தினை முன்னிட்டு இல்ல மாணவர்களுக்கு சுமார் 113,000 ரூபா பெறுமதியான புத்தாடைகளையும் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினுடாக அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
Read more

lanka-chinaஇலங்கைக்கு 120 மில்லியன் யுவான் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க சீன இணக்கம் தெரிவித்துள்ளது. ஆதி நவீன ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்கவும் சீன அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது இலங்கை – சீன பாதுகாப்புக் கலந்துரையாடலின் போதே இதற்கான இணக்கப்பாடுகளும் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. Read more

ANANDASANGAREEகௌரவ ரணில் விக்ரமசிங்க, பிரதம மந்திரி
அன்புடையீர்

சாதாரண மனிதனின் பரிதாபநிலை

“யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி தேவை” என்ற தலைப்பில் கடந்த 13-06-2016 இல் மேதகு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் பிரதி தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது தங்களின் கவனத்தை ஈர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அக்கடிதத்தில் அவசிய தேவையுள்ளவர்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ முன்பு உணவு பொருட்கள் வழங்கப்பட்ட முறையை மீளவும் புதுப்பிக்குமாறு கேட்டிருந்தேன். Read more

europeanஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டசக் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். இலங்கை அடைந்துள்ள தற்போதைய அரசியல் மற்றும் சமூக மறுசீரமைப்புகள், ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான விளிம்பிற்கு கொண்டுவந்துள்ளதாகவும் டொனால்ட் டசக் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

dfdfஆயிரம் ரூபா சம்பளம், வருடத்தில் 300 நாட்கள் வேலை, நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் மலையகத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அக்கரபத்தனை – பெல்மோரல், கிரன்லி, கிலஸ்டல் ஆகிய தோட்ட தொழிலாளர்கள் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, 800ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெல்மோரல் கொழுந்து நிறுவை செய்யும் இடத்திலிருந்து பேரணியாக தொழிற்சாலை வரை சென்றனர். Read more