Header image alt text

ranilபிரசெல்ஸிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரீன்ஸ் ஐரோப்பிய கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சோஷலிச மற்றும் ஜனநாயகக் கட்சியினரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் சூழல் பாதுகாப்பினூடான சுற்றுலாத்துறை வளர்ச்சி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. Read more

rita-sampanthanயுத்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பது அவசியமானது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை விடுவித்தல், மீள்குடியேறும் மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுத்தல் வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

indian-foriegn-secretaryஇந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இராஜதந்திரத்தை பயன்படுத்தி இந்திய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை வெளிநாடுகளில் மேற்கொள்ளும் கொள்கையின் கீழ் இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சீனா இலங்கையில் மேற்கொள்ளும் வர்த்தகத்துக்கு ஈடான வர்த்தகத்தை தேடுவதே ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருவதன் நோக்கமாகும் என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. Read more

lawyersவட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி நீதவானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பொய்யான பிரச்சாரம் இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்கள் உட்பட வடக்கின் அனைத்து சட்டத்தரணிகளும் இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்தனர். Read more

ganesharajah-judgeமுல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக நீதிமன்ற கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதிபதியாக கடமையாற்றியபோது மேற்கொண்டிருந்த முயற்சியின் பயனாக நீதியமைச்சினால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. Read more

nisangaஎவன்கார்ட் தலைவர் நிசாங்க சேனாதிபதி வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. வைத்திய சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதியளிக்குமாறு நீதிமன்றத்திடம் நிசாங்க சேனாதிபதி கோரிக்கை விடுத்திருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

vijayakalaஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பாதா காசிம் அல் முல்லா மற்றும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சிறுவர்கள் மற்றும் விதவைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

யுத்தத்தினால் வடக்கிலுள்ள மக்களின் சுகாதார மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து பெரும் தேவைப்பாடு ஏற்பட்டுள்ளதாக, இதன்போது அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

dhilrukshiஇலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் அண்மையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து, நேற்றையதினம் அவரது இராஜினாமா ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

thaya-ratnaikeமுன்னாள் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்க இன்று பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, இராணுவ வங்கிக் கணக்கு ஒன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபா அரச நிதி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காகவே இவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

vigneswaranவட மாகாணத்தில் 150,000 வரையிலான இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளமை, வன்முறைக்கான அடித்தளத்தை இடுகின்றது என்று குற்றஞ்சாட்டியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பொதுமக்களின் நிலங்கள், வாழ்வாதாரங்கள், வர்த்தகம், வளங்கள் ஆகியவற்றைப் பறித்தெடுத்திருப்பதுடன், அங்கு வாழும் விதவைகள் மற்றும் ஏனையவர்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும், இராணுவத்தினர் இருந்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலண்டன், கிங்ஸ்டன் மாநகர சபைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ‘இரட்டை நகர’ உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு, முதன்மை உரை ஆற்றியபோதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். Read more