யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்தும், மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் குறித்த தோட்டத்தின் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து, உயிரிழந்த யாழ். பல்கலைகழக மாணவர்களுக்கு எமது உணர்வுபூர்வமான அஞ்சலிகள், அப்பாவி மக்களை துன்புறுத்தும் பொலிஸாரின் அடாவடி தனத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும், அஞ்சலிக்காக மெழுகுவர்த்தியை வைத்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். Read more