உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாய்லாந்தின் பேங்கொக் நகரம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இன்றையதினம் காலை 7.25 மணியளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.882 என்ற விமானத்தில், கட்டுநாயக்க பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்குப் பயணமாகியுள்ளார். தாய்லாந்து பிரதமரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்துள்ளது. தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆசிய ஒத்துழைப்பிற்கான கருத்தாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார். Read more