Header image alt text

sri-lanka-south-koreaஇலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தினை தென்கொரிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் வீ சேங்கோ மற்றும் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் ருவான் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
Read more

vigneswaranசுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கையர்களை திருப்பி அனுப்புவது, இப்போதைக்கு உசிதமானது இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிட்சர்லாந்தின் நீதி அமைச்சர் சிமோனிற்றா சோமறுகா, தமது விஜயத்துக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது,
Read more

karunasenaஇந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் இடம்பெறுகின்ற பயங்கரவாத மோதல்கள் தொடர்பில் இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு ஒத்துழைப்புககளை கோரும் பட்சத்தில் அது குறித்து சிந்திக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை ஊடான பயங்கரவாத ஊடுறுவல்கள் குறித்து இந்தியா ஏற்னவே எச்சரித்திருந்த நிலையில், காஷ்மீர் எல்லை பகுதியில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. அந்தவகையில் இலங்கையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், Read more

airportவிமான போக்குவரத்து கட்டுபாட்டு பணியாளர்கள் மந்தகதியிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கொடுப்பனவு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாலை 4.45 மணியிலிருந்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விமானப் பயணங்களுக்கு தடையேற்படலாம் என விமான போக்குவரத்து கட்டுப்பாளட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஜுன ஹதராகம குறிப்பிட்டார்.  Read more

mihinமிஹின் லங்கா விமான நிறுவனத்தின் நடவடிக்கைகளை எதிர்வரும் 31ஆம் திகதி முதல் சிறீலங்கன் விமான நிறுவனம் பொறுப்பேற்கவுள்ளது. அதற்கமைய தொடர்ந்து மிஹின் லங்கா விமான நிறுவனம் ஊடாக மேற்கொள்ளவுள்ள விமான பயணங்கள் அனைத்தும் சிறீலங்கன் விமான நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

தற்போது, மிஹின் லங்கா விமான சேவை ஊடாக பஹ்ரைன், மதுரை, டாக்கா, மஸ்கட், மாலே, சீசெல்ஸ், புத்தகயா உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவைகள் இடம்பெற்று வருகின்றன. மிஹின் லங்கா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்கள் இனி சிறீ லங்கன் விமான நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

deadகிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 8மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரவு பகலாக இரணைமடுக் குளத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த 22 வயதுடைய கனகராசா கோபிநாத் என்பவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

american-websiteஇலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பொலிவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க தூதரகம் வழங்கும் சேவைகள், செய்திகள் உள்ளிட்ட தகவல்களை இந்த புதிய இணையத்தளத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம். டம.ரளநஅடியளளல.பழஎ என்ற இணைய முகவரியில் புதிய இணையத்தளத்தை பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

sdfdfddவவுனியா வடக்குப் பிரதேசத்தில் சிங்களவர்களே வசிக்காத தமிழ் கிராமத்துக்கு சிங்கள கிராமசேவகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வடக்குப் பிரதேசத்திலுள்ள மாமடு கிராமசேவகர் பிரிவில் பணிபுரிபவர் ஒரு சிங்கள கிராமசேவகர் எனவும், அவர் தற்போது அங்கிருந்து மாற்றலாகி தமிழ் கிராமமான ஒலுமடு கிராமத்துக்கு வரவுள்ளார் எனவும் அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.
Read more