இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எவ்வாறான உதவிகளை வழங்கமுடியும் என்பது தொடர்பிலும் இலங்கையில் வடக்கு பிரச்சினை குறித்தும், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விரிவாகக் கலந்துரையாடியதாக, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் தலைமையிலான குழு, கடந்த வெள்ளிக்கிழமை, நியூசிலாந்தை அடைந்தது.
அதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, தலைமையிலான குழுவினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில், இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று, ஹொக்லேன்டில் உள்ள அரசாங்க இல்லத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. Read more