Header image alt text

03யாழ். குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மேற்படி விளையாட்டு உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

இன்று (29.11.2016) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15அளவில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு. சிறீமோகன், குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திரு. செல்வரட்ணம், விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு. துஸ்யந்தன் மற்றும் பாடசாலை மாணவர்களும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். Read more

karunaவிடுதலைப் புலிகள் இயக்த்தின் முன்னாள் கிழக்குப் பகுதி தளபதி ‘கர்னல்’ கருணா, எனப்படும், விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு வாகனத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவரை இன்று காலை விசாரணைக்கு வருமாறு நிதித்துறை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் அழைத்தி்ருந்தனர். அப்போது சில மணி நேரங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு அவரைக் கைது செய்ததாகப் போலிசார் கூறினர். Read more

rathakrisnanஇலங்கையில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுவதற்கு மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு முன்னணி தயாராகிவருவதாக அம் முன்னணியின் தலைவர்களில் ஒருவரான கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிரூணஸ்ணன் தெரிவித்திருக்கின்றார்.

இரு சாராரும் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு செயல்பட முடியும் என நுவரெலியா மாவட்டத்தில் இந்திய உதவி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது நம்பிக்கையும் வெளியிட்டுள்ளார். Read more

indiaஇந்திய நிர்வாகத்துக்குட்பட்ட ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் நடந்து வரும் துப்பாக்கி மோதலில், ஒரு ராணுவ அதிகாரி உட்பட மூன்று இந்தியப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ;மீரின் ஜம்மு பகுதியில், மிக தீவிரமாக செயல்படும் இந்திய ராணுவ தளமான நக்ரோடா பகுதியில் இந்த மோதல் நடந்து வருகிறது.
 
செவ்வாய் அன்று காலை, பலத்த ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் பீரங்கி ரெஜிமென்ட் முகாமைத் தாக்கினர். இந்த நடவடிக்கை தொடரும் நிலையில், எங்களது படையினர் இறந்தவர்கள் குறித்து எதுவும் சொல்லமுடியாது,” என ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் மனீ மேத்தா பிபிசியிடம் கூறினார். Read more

pansapஇந்தியாவில் சிறையிலிருந்து தப்பித்த, தடை செய்யப்பட்ட சீக்கிய தீவிரவாதக் குழு ஒன்றின் தலைவராகக் கருதப்படும் ஹர்மிந்தர் சிங் மின்டூவை மீண்டும் கைது செய்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிறன்று வட இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் நாபா என்ற பகுதியிலிருந்த ஒரு உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சிறையை போலிஸ் உடைகளில் வந்த ஆயுத குழுவினர் தாக்கி மின்டூவை விடுவித்தனர். Read more

04img_8584தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில், சுவிஸ் வாழ் அன்பரின் தாயாரின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு தொகுதி அன்பளிப்பு பொருட்களும், மதிய உணவும் இன்றையதினம்(27.11.2016) வவுனியா செட்டிகுளம் உள நல காப்பகமான “மகிழ்வகம்” நிலையத்தில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இன்றையதினம் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அழைப்பின் பெயரில் வருகைதந்த அதிதிகளான வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் திரு முத்தையா கண்ணதாசன், வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திரு சி.ரவீந்திரன் ஆகியோரினால் அன்பளிப்பு பொருட்கள் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி எஸ்.நர்மதா, மகிழ்வகம் தாதிய உத்தியோகத்தர் திருமதி ஜெ.சந்திரகலா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. 

Read more

img_3838வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் திரு, கந்தையா சிவநேசன் தனது வருடாந்த அபிவிருத்தி மூலதன நன்கொடை நிதிமூலம் செயற்படுத்தப்படுகின்ற திட்டங்களை மேற்பார்வை செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கரைதுறைப்பற்று செயலக பிரிவுக்குட்பட்ட கறுநாட்டுக்கேணி கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

2016ம் ஆண்டிற்குரிய நிதியில் கறுநாட்டுக்கேணி கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்துக்கான மின் இணைப்புக்கென ரூபா 30,000/- ம் கறுநாட்டுக்கேணி கற்பக விநாயகர் முன்பள்ளியின் சுற்று வேலி மற்றும் கட்டிடத் திருத்தங்களுக்காக ரூபா 70,000/- ம் வழங்கப்பட்டிருந்தன.

இவ்வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய சென்ற மாகாணசபை உறுப்பினர் முன்பள்ளியின் தரம், தேவைகள் பற்றியும் ஆசிரியையிடம் கேட்டறிந்து கொண்டார். Read more

img_8219வவுனியா வாணி அருணோதயா முன்பள்ளியின் 6ம் ஆண்டு கலை நிகழ்வுகள் திரு. எஸ்.தயாளன் அவர்களது தலைமையில் 26.11.2016 (சனிக்கிழமை) வவுனியா நகரசபை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான திரு ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் திரு கே.மஸ்தான் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா சைவபிரகாச மகளீர் கல்லூரியின் அதிபர் திருமதி. பா.காமலேஸ்வரி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். கௌரவ அதிதிகளாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) மற்றும் Read more

fidal-castroகியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் கம்பியூனிஸ புரட்சித் தலைவருமான பிடல் கஸ்ட்ரோ உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 07 மணிக்கு தனது 90ஆவது வயதில் காலமானார்.

1920ம் ஆண்டு தென் கிழக்கு கியூபாவின் ஒரியன்டே மாகாணத்தில் பிறந்த பிடெல் கெஸ்ட்ரோ, கியூபாவில் புரட்சி மூலம் 1959-ல் ஆட்சி அதிகாரத்தை ஃபிடல் காஸ்ட்ரோ கைப்பற்றினார். 1959 முதல் 1976ம் ஆம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராக இருந்து பின்னர் 1976ம் ஆண்டு அந்த நாட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். Read more

chandrikaகுறுகிய அரசியல் நோக்கத்திற்காக இனங்களையும் மதங்களையும் இழிவுபடுத்தி அதனூடாக சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு நாட்டில் இடமில்லை என்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

வெறுக்கத்தக்க கருத்துக்கள் மூலமாக இனங்களையும் மதங்களையும் இழிவுபடுத்தி அதன் மூலம் சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவர் என்ற ரீதியில் சந்திரிகா குமாரணதுங்க விடுத்திருக்கும் அறிக்கையில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. Read more