கௌரவ குழுக்களின் பிரதித் தலைவர் அவர்களே!
இந்த புதிய நல்லாட்சி அரசினுடைய இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் சகலருக்கும் நன்மை பயக்கும் துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சியை நோக்கி என்ற குறியீட்டுடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
இதிலே பல விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இந்த நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி மாத்திரமல்லாது மாணவர்களுக்கு முக்கியமாக கல்விக்கு என இப்படியாக பல நல்ல விசயங்கள் கூறப்பட்டிருந்தாலும், இந்த வரவுசெலவுத் திட்டம் நிச்சயமாக நடுத்தர அல்லது வறுமைக் கோட்டுடன் வாழக்கூடிய மக்களுக்கு முழுமையான ஒரு பயனைக் கொடுக்கக்கூடிய ஒரு வரவுசெலவுத் திட்டமாக பார்க்க முடியாமல் இருக்கின்றது. Read more