Header image alt text

img_3838வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் திரு, கந்தையா சிவநேசன் தனது வருடாந்த அபிவிருத்தி மூலதன நன்கொடை நிதிமூலம் செயற்படுத்தப்படுகின்ற திட்டங்களை மேற்பார்வை செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கரைதுறைப்பற்று செயலக பிரிவுக்குட்பட்ட கறுநாட்டுக்கேணி கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

2016ம் ஆண்டிற்குரிய நிதியில் கறுநாட்டுக்கேணி கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்துக்கான மின் இணைப்புக்கென ரூபா 30,000/- ம் கறுநாட்டுக்கேணி கற்பக விநாயகர் முன்பள்ளியின் சுற்று வேலி மற்றும் கட்டிடத் திருத்தங்களுக்காக ரூபா 70,000/- ம் வழங்கப்பட்டிருந்தன.

இவ்வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய சென்ற மாகாணசபை உறுப்பினர் முன்பள்ளியின் தரம், தேவைகள் பற்றியும் ஆசிரியையிடம் கேட்டறிந்து கொண்டார். Read more

img_8219வவுனியா வாணி அருணோதயா முன்பள்ளியின் 6ம் ஆண்டு கலை நிகழ்வுகள் திரு. எஸ்.தயாளன் அவர்களது தலைமையில் 26.11.2016 (சனிக்கிழமை) வவுனியா நகரசபை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான திரு ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் திரு கே.மஸ்தான் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா சைவபிரகாச மகளீர் கல்லூரியின் அதிபர் திருமதி. பா.காமலேஸ்வரி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். கௌரவ அதிதிகளாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) மற்றும் Read more

fidal-castroகியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் கம்பியூனிஸ புரட்சித் தலைவருமான பிடல் கஸ்ட்ரோ உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 07 மணிக்கு தனது 90ஆவது வயதில் காலமானார்.

1920ம் ஆண்டு தென் கிழக்கு கியூபாவின் ஒரியன்டே மாகாணத்தில் பிறந்த பிடெல் கெஸ்ட்ரோ, கியூபாவில் புரட்சி மூலம் 1959-ல் ஆட்சி அதிகாரத்தை ஃபிடல் காஸ்ட்ரோ கைப்பற்றினார். 1959 முதல் 1976ம் ஆம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராக இருந்து பின்னர் 1976ம் ஆண்டு அந்த நாட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். Read more

chandrikaகுறுகிய அரசியல் நோக்கத்திற்காக இனங்களையும் மதங்களையும் இழிவுபடுத்தி அதனூடாக சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு நாட்டில் இடமில்லை என்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

வெறுக்கத்தக்க கருத்துக்கள் மூலமாக இனங்களையும் மதங்களையும் இழிவுபடுத்தி அதன் மூலம் சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவர் என்ற ரீதியில் சந்திரிகா குமாரணதுங்க விடுத்திருக்கும் அறிக்கையில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. Read more

drawnமட்டக்களப்பு, ஏறாவூர், புன்னகுடா கடலில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த 17வயதான இரண்டு மாணவர்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று நீராடச் சென்றவேளை, அவர்களில் மூவர் கடல் அலைக்கு இழுத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இதன்போது அந்த மூவரில் ஒருவரான 17வயதான சேகுதாவூத் அக்ரம் காப்பாற்றப்பட்டதுடன், ஏனைய இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். Read more

sasஆட்கடத்தலுடன் தொடர்புடைய சில இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூர் பொலிஸாரால் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்புகளின்போது இலங்கையர்கள் இந்தியர்கள் உட்பட 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட தருணத்தில் சந்தேகநபர்கள் தடுத்துவைத்திருந்த 35 பேரையும் கோலாலம்பூர் காவல்துறையினர் மீட்டுள்ளனர். Read more

vattuvahalமுல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்படைத் தளம் அமைந்துள்ள நிலப்பகுதியினை கையகப்படுத்தும் பொது அறிவித்தல், பிரதேச செயலாளரினால் நேற்றுமாலை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் உள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கடற்படை முகாம் பகுதியினை, முழுமையாக அபகரிக்க இதுவரை காலமும் காணி சுவீகரிப்பின் 38 ஏ யின் கீழ் நடவடிக்கைகள் இடம்பெற்றன. Read more

jail.......கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை அமைத்துள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவான ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 7 வருடங்களுக்கு மேற்பட்ட மற்றும் நீண்டகாலமாக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். Read more

norwayநோர்வேயில் பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்ட 76 இலங்கை தமிழர்கனை அந்நாட்டு பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நோர்வேயில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்களின் அடையாளத்தை பயன்படுத்தி குறித்த அனைவரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள், துப்பரவு தொழில் செய்யும் 34 வயதுடைய பிரதான சந்தேக நபர் கடுமையாக உழைத்து முன்னேறிவரும் ஒருவராக தன்னை அடையாளம் காட்டி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். Read more