ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலே அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று கொழும்பிலுள்ள பிரித்தானிய உயரிஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அமைச்சரை தெளிவுபடுத்திய கூட்டமைப்பின் தலைவர், தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை அரசியல் யாப்பினூடாக அடைவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். Read more