china-ambasadorஇலங்கை அரசாங்கம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சீனத் தூதுவருடன், வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோன், தொலைபேசிமூலம் உரையாடியுள்ளதாக கூறப்படுகின்றது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்ட கருத்துக்களை ஊடகவியலாளர்கள் முன்பாக விமர்சித்து சீனத் தூதுவர் யிஷியாங்லியாங் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இதுகுறித்து, சீனத் தூதுவரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து அதிருப்தியை வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோன், நேற்று சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங்குடன் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார்.

இதன்போது, இதுபோன்ற கருத்துக்களை ஊடகங்கள் மூலம் கலந்துரையாடக்கூடாது என்று சீனத் தூதுவருக்கு வெளிவிவகாரச் செயலர், எடுத்துக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், எந்த விவகாரம் தொடர்பாகவும், திறந்த கலந்துரையாடல் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எப்போதும் தயாராகவே இருப்பதாகவும் எசல வீரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.