Header image alt text

????????????????????????????????????

கௌரவ டி. எம். சுவாமிநாதன், பா. உ. அவர்கட்கு,

சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்,

356B, சிறைச்சாலை மறுசீரமைப்பு,  புனர்வாழ்வு,  மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு,கொழும்பு 3

கௌரவ அமைச்சர் அவர்களுக்கு, Read more

img_9999-27வவுனியா கோவில்குளம் ரொக்கெற் விளையாட்டுக்கழகத்தின் தீபாவளி வு20 துடுப்பாட்ட போட்டியின் இறுதிப்போட்டி 29.10.2016 அன்று கழகத்தின் தலைவர் திரு பார்த்தீபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ் இறுதி போட்டியில் சார்ள்ஸ் விளையாட்டு கழகம் எதிர் பரலோக மாதா விளையாட்டுக் கழகங்கள் மோதின இதில் பரலோக மாதா அணியினர் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ் இறுதிப்போட்டியின் பிரதம அதிதியாக புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்தார். Read more

sவட்டுக்கோட்டையைச் சேர்ந்த பிரசன்னா கஐநிதி தம்பதிகளின் 1வது ஆண்டு திருமண நாள் நிறைவினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டம் பாரதி இல்லத்திலுள்ள 108 பெண் பிள்ளைகளுக்கு சுமார் 30,000 ரூபா பெறுமதியான புதிய ஆடைகள் இன்று இல்லத்தில் வைத்து எமது சங்கத்தினுடாக அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

1வது ஆண்டு திருமண நாளினைக் கொண்டாடும் பிரசன்னா கஐநிதி தம்பதிகளுக்கு எமது சங்கத்தின் சார்பிலும் இல்ல பிள்ளைகளின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன். இவ் நல்லுள்ளமும் கருனையும் கொண்ட இவ் தம்பதிகள் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழத்துவதோடு நன்றிகளையும் கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)
Read more

bஎமது புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் அவர்கள் தனது தந்தை பரஞ்சோதி (17.10.2016) மற்றும் தங்கை ராஜேஸ்வரி (16.10.2016) பிறந்த தினத்தினை முன்னிட்டு

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விழிப்புலனற்ற மற்றும் விசேட தேவைக்குரிய இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளதுடன். தீபாவளி தினத்தினை முன்னிட்டு இல்ல மாணவர்களுக்கு சுமார் 113000 ரூபா பெறுமதியான புத்தாடைகளையும் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினுடாக அன்பளிப்பாக வழங்கியுள்ளார். Read more

europe-parliament-groupநாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற குழு வலியுறுத்தி உள்ளது.

இலங்கையில் 2009-ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னரும், யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த சில தமிழ் மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் வன்முறை, சித்திரவதை என மனித உரிமை மீறல்களும் இலங்கையில் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. Read more

arpattamமட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி நாவலடிப் பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு கோரி மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் நாவலடி இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று புதன்கிழமை பாதிக்கப்பட்ட மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தெடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், ‘1968ஆம் ஆண்டு முதல் மேற்படி பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்துவந்த நாம், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 1990ஆம் ஆண்டு எங்களின் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வருகின்றோம். Read more

united nationsஇலங்கையில் கடந்த வருட காலங்களில் பொலிஸாரிற்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவால் ஐக்கிய நாடுகள் சபையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சித்திரவதைகள் பரவலாக பின்பற்றப்படுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டமே காரணம் என ஜநா அமர்விற்கு முன்வைத்த அறிக்கையில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. Read more

sl armyஇராணுவப் புலனாய்வு பணிப்பாளராக, பிரிகேடியர் எம்.டி.யூ.வி. குணதிலக்க இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இராணுவ ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வு பணிப்பாளர் பிரிகேடியர் சாலி, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது வெற்றிடத்துக்கே பிரிகேடியர் வி. குணதிலக்க, உடன் அமுலுக்கு வரும் வகையில் நியமகிகப்பட்டுள்ளமை இங்கு குறுpப்பிடத்தக்கது.

aarpattamதமக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கோரி சேவையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, “இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு” குறிப்பிட்டுள்ளது.

ஓய்வூதியம் பெற நிர்ணயிக்கப்பட்ட கால எல்லையான 12 வருடங்களை பூர்த்தி செய்யாது இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் கடந்த 31ம் திகதி முதல் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். Read more

mangalaவெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு விசாரணை அதிகாரிகள் குழுவொன்றை வெளிவிவகார அமைச்சு நியமித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்தில், வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் இராஜதந்திரிகள் மற்றும் கொன்சூலர் அலுவலக அதிகாரிகளின் செயற்பாடுகளை ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more