Header image alt text

fb_img_1475311775076வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் இன்றுகாலை (01.10.2016) 9.30 மணியளவில் சிறுவர்களை மகிழ்வித்து வாழ்த்தும் அவர்களின் உரிமைக்கான சர்வதேச சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் முன்பள்ளியின் அதிபர் திருமதி. மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.சுந்தரலிங்கம் காண்டீபன் (திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளரும் வவுனியா மாவட்ட சாரணிய உதவி ஆணையாளர்) கலந்து சிறப்பித்திருந்தார். இந் நிகழ்விற்கு புளொட் அமைப்பின் பிரித்தானியா கிளை உறுப்பினர் திரு.தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் நிதி அனுசரணை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read more

newzealandநியூசிலாந்தின் உயர்ஸ்தானிகரகம் ஒன்றை இலங்கையில் நிறுவுவதற்கு தீர்மானிக்கவுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார்.

நியூசிலாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு இன்று நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்போதே நியூசிலாந்து பிரதமர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். Read more

rukki-fernandoமனித உரிமை செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ குற்ற புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பாக வெளிநாட்டில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளவென வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தபோதே மனித உரிமை செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

swordயாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் நேற்றிரவு சகோதரர் இருவர் உட்பட மூவர்மீது கும்பலொன்று மேற்கொண்ட வாள்வெட்டில், மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலில் இராசாவின் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சகோதரர் இருவர் உட்பட மூவரும் படுகாயமடைந்துள்ளார். ஸ்ரான்லி வீதியில் உள்ள கடையொன்றின் முன்பாக நின்று உரையாடிக்கொண்டிருந்த சமயம் மூன்று மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த குழு இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. Read more

sssகிளிநொச்சி 155ஆம் கட்டை ஆனந்தநகர் பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரதிபுரத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான (54) சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற தபால்ரயிலில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Read more

sripavanகனகராயன்குளம் மாங்குளம் பிரதேசத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த பௌத்த சிலை உடைப்பு வழக்கு விசாரணைகளிலிருந்து பிரதம நீதியரசர் கே. சிறீபவன் விலகிக் கொண்டுள்ளார்.

பிரதம நீதியரசர் கே.சிறீபவன், நீதியரசர்களான புவனக்க அலுவிஹார மற்றும் கே.ரீ. கித்சிறி ஆகியோர் இந்த மனுவை விசாரணை செய்தனர். வடமாகாண முதலமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், வடமாகாண ஆளுனர், பௌத்த சாசன அமைச்சர், ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். Read more

gnanasaaraவடக்கு எமக்கே உரியது இலங்கையில் 2500 வருட பழமையான இனம் சிங்கள இனமே அதனால் வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என பொதுபலசேனாவைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். வவுனியா நகரில் நேற்று பொதுபல சேனா ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழர்கள் இலங்கையை அல்லது வடக்கை சொந்தம் கொண்டாட முடியாது பெரும்பான்மை இனத்தனவரான சிங்களவர்களுக்கே வடக்கு சொந்தம். மேலும் வடக்கில் விகாரைகள் அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது. அவை அனைத்தும் முறைகேடானது. இலங்கையை உருவாக்கியது பௌத்தர்களே. அவர்களுக்கு எங்கும் விகாரைகள் எழுப்ப உரிமையுள்ளது.
Read more

sfdfdfdவட மாகாணசபையின் பிரதி அவைத் தலைவர் திரு. அன்டனி ஜெயநாதன் அவர்கள் இன்று காலை முள்ளியவளைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து தூக்கியெறியப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். அவரது சடலம், மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.