Header image alt text

sfdயாழ்ப்பாணத்தில் கடந்த 21ஆம் திகதி, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் பொலிஸார்மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாட்;களாக விசேட அதிரடிப் படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

வழமையாக ஹர்த்தால் உள்ளிட்ட சம்பவங்களின் போது, பொலிஸார் பூரண பாதுகாப்பை வழங்குவார்கள். ஆனால், இன்று ஹர்த்தால் நடைபெறும் போது பொலிஸார் எவ்விதப் பாதுகாப்பையும் வழங்கவில்லை. Read more

arrest (2)கொழும்பு, மட்டக்குளி, சமித்புர பகுதியில், நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இருவரைக் கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த எழுவரில் நால்வர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன்னரே, உயிரிழந்திருந்ததாகவும், ஏனைய மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். Read more

KPபுலிகளின் முன்னாள் முக்கியஸ்தரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்வதற்கான தடையை எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதிவரை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் கே.பி.யை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கோரி, குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது. Read more

sdsஇராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மனைவியுடைய வாகனம் நேற்றிரவு 8மணியளவில் விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்த வாகனத்தில் பயணித்த அமைச்சரின் மகன் மற்றும் வாகனத்தை செலுத்திய சாரதி ஆகிய இருவரும் விபத்து தொடர்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 49 வயதுடைய ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே மேற்படி விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

kurunegala-tunnelகுருநாகல் கஹாடகஹா பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் பணியாற்றும் சுரங்கப்பணியாளர்கள், சுமார் 1132 அடி ஆழமான சுரங்கத்துக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த சுரங்கத்தை, அரசாங்கம் தனியார் மயமாக்கவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

errயாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிஸரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றையதினம் வட மாகாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் நடைபெறாத நிலையில், வியாபார நிலையங்களும் மூடப்பட்டு சன நடமாட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்துடன் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், கல்வி நடவடிக்கைகளும் முற்றாக முடங்கியுள்ளன. Read more