thaya-ratnaikeமுன்னாள் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்க இன்று பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, இராணுவ வங்கிக் கணக்கு ஒன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபா அரச நிதி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காகவே இவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் படையதிகாரிகளை நீதிமன்றங்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு ஜனாதிபதி அண்மையில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் முன்னாள் இராணுவத்தளபதி ஒருவர் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.