b1aceஇராக்கில் ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக கருதப்படும் மொசூல் நகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கில் அந்நாட்டு மக்கள் கடத்தப்பட்டதற்கான உறுதியான தகவல்கள் கைவசம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மொசூல் நகரை நோக்கி அரசு படைகள் மற்றும் அதன் கூட்டணி படைகளும் முன்னேறி வரும் நிலையில், கடத்தப்பட்ட பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்த அது திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.ஐ.எஸ் குழுவில் சேர மறுத்த இராக் பாதுகாப்பு படையை சேர்ந்த 190 முன்னாள் படையினரும், 42 பொதுமக்களும் ஜிஹாதிகள் குழுவினரால் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

இருவாரங்களுக்குமுன், பாக்தாத்தில் உள்ள அரசாங்கமானது, வட புல மொசுல் நகரில் உள்ள ஐ.எஸ் அமைப்பினரை விரட்டியடிக்க மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை தொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.