 தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேனவை தொடர்ந்து நவம்பர் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேனவை தொடர்ந்து நவம்பர் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
குறித்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது பொருளாதார அமைச்சின்கீழ், முன்னாள் எம்.பி கே.கே.பியசேனவிற்கு வழங்கப்பட்டிருந்த பிராடோ ஜீப் கடந்த 2வருடங்களாக மீள ஒப்படைக்கப்படவில்லை. குறித்த வாகனம் கடந்த ஜூன்மாத இறுதியில் கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்டதுடன், வாகன சாரதியும் கைதுசெய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பியசேன கொழும்பு குற்றத்தடுப்புத் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
பின்னர் சாரதி கடந்த வழக்கு விசாரணையின்போது பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், பியசேனவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட வாகனம் பற்றிய விசாரணைகள் தொடர்வதால், நவம்பர் 9ஆம் திகதி வரை கே.கே.பியசேனவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
