வவுனியா சகாயமாதபுர சண் இளைஞர் கழக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்றையதினம் (24.12.2016) வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் அனுசரணையில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டுள்ளது.
சண் இளைஞர் கழகத்தின் தலைவர் திரு. ஸ்ரெனின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன், வவுனியா பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி திரு. அஜித் சந்திரசேன, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளருமான திரு ஸ்ரீ.கேசவன், உபதலைவர் திரு பி.கெர்சோன், அமைப்பாளர் திரு வ.பிரதீபன், கலாசார பிரிவின் ஒழுங்கமைப்பாளர் திரு தே.பிரகாஸ்கர் ஆகியோருடன் இவ் நிகழ்வில் சண் இளைஞர் கழகத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களும், மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.