Header image alt text

img_0050வவுனியா சகாயமாதபுர சண் இளைஞர் கழக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்றையதினம் (24.12.2016) வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் அனுசரணையில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டுள்ளது.

சண் இளைஞர் கழகத்தின் தலைவர் திரு. ஸ்ரெனின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன், வவுனியா பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி திரு. அஜித் சந்திரசேன, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளருமான திரு ஸ்ரீ.கேசவன், உபதலைவர் திரு பி.கெர்சோன், அமைப்பாளர் திரு வ.பிரதீபன், கலாசார பிரிவின் ஒழுங்கமைப்பாளர் திரு தே.பிரகாஸ்கர் ஆகியோருடன் இவ் நிகழ்வில் சண் இளைஞர் கழகத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களும், மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

airportகட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் விருந்தினர்கள், புறப்படுகை பிரதேசத்துக்குள் ஜனவரி 6ஆம் திகதி தொடக்கம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்புப் பணிகள் வரும் ஜனவரி 6ஆம்திகதி தொடக்கம், ஏப்ரல் 5ஆம் திகதி வரையான மூன்று மாதங்களுக்கு இடம்பெறவுள்ளது. இந்த மூன்று மாத காலப்பகுதியில், காலை 8.30 மணி தொடக்கம், மாலை 4.30 மணி வரையான எட்டு மணித்தியாலங்கள் விமான நிலையத்தின் ஊடான அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படவுள்ளன. Read more

wijayadasaவவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நேற்றையதினம் வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஓவியா விருந்தினர் விடுதியில் வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராசலிங்கம் அவர்களின் தலைமையில் இச் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் வவுனியா வர்த்தக உரிமையாளர்கள் தாம் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்த நிலையில் அமைச்சரினால் சில விடயங்களுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் வர்த்தக சங்கத் தலைவர் தெரிவித்தார். Read more

maveerar-illamகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்கும் தீர்மானம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போதே இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

இக் கூட்டம் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது இதன்போது கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது. இதனை தொடர்ந்து இணைத் தலைவர்களும் அங்கீகரிக்க கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஏகமனதாக எடுத்துள்ளது. Read more

reginold cooray“ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்” மக்கள் குறைகேள் அலுவலகத்தினை எதிர்வரும் ஜனவரி மாதம் 04ம் திகதி ஜனாதிபதி யாழில் திறந்து வைக்கவுள்ளார். முதன்முதலாக வட மாகாணத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த அலுவலகம் யாழ்.மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி மாதம் 04ம் திகதி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து ஜனாதிபதி நேரடியாக மக்களுக்கு தீர்வுகளை வழங்கவுள்ளார். Read more

ravirajதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கடற்படையினர் மூவர் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் நடைபெற்ற மிக நீண்ட வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று அதிகாலை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பிரதம நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க குறித்த தீர்ப்பை இன்று அதிகாலை 12.15 அளவில் வழங்கியுள்ளார். இதன்பிரகாரம் இந்த வழக்கின் பிரதிவாதிகளான மூன்று கடற்படை உறுப்பினர்களும், வழக்கு விசாரணைகளை தவிர்த்து வந்த ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more

dfgfgமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு, முற்ககொட்டான்சேனை விளையாட்டு மைதானத்தில் காணப்பட்ட மோட்டார் குண்டொன்றைப் படையினர் மீட்டுள்ளனர்.

கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம், இன்று ஸ்தலத்துக்கு விரைந்த முறக்கொட்டான்சேனைப் படையினரும் ஏறாவூர் பொலிஸாரும், இந்த மோட்டார் குண்டை மீட்டுள்ளனர். இது யுத்த காலத்தில் கைவிடப்பட்ட குண்டாக இருக்கலாம் என குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.