Header image alt text

keppapilavuமுல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளுள் ஒரு தொகுதி காணி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியை கையளிப்பதற்காக ஜனாதிபதி, எதிர்வரும் ஜனவரி மாதம் அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஜனவரி 8ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ள நிலையில், இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. Read more

arrestஉள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகளுடன் மூன்று பேர் பொத்துவில் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப் படைப்பிரிவு அருகம்பே முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் உள்நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கிகள் 03 மற்றும் 04 ரவைகள் உட்பட கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக விஷேட அதிரடிப்படை கூறியுள்ளது.

assasடுபாயில் இறந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று மாலை சந்திவெளியிலுள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு சந்திவெளியை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான இளையதம்பி சூரியகுமார் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராக தெரியவருகிறது.

இவர் தொழில் நிமித்தம் காரணமாக டுபாயில் ஒரு கம்பனியில் வேலை செய்ததாகவும், விபத்தொன்றின் மூலம் உயிரிழந்துள்ளதாக வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். டிசம்பர் இரண்டாம் திகதி அவர் இறந்த தகவல் சக நண்பர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு மூலம் அறிந்தாகவும், அதனையடுத்து சமூக சேவை நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இலங்கை அரசாங்கத்தின் மூலம் டுபாயில் இருந்து சடலத்தை இலங்கைக்கு கொண்டுவந்ததாகவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

kovilமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட வாகனேரி சிறீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த மூல விக்கிரகமான சிவலிங்கம் உட்பட ஆலயத்தின் திரைச் சீலை மற்றும் ஆலயத்தின் பொருட்கள் இனந்தெரியாதோரினால் உடைக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு பூசையை முடித்தவிட்டு இன்று அதிகாலை பூசைக்காக பூசகர் கோயிலுக்கு சென்றபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதை அவதானித்துள்ளர். குறித்த விடயத்தினை ஆலயத்தின் தலைவர் உட்பட நிருவாகத்தினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, வாழைச்சேனைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஆலய நிருவாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். Read more

unஇலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவின் சில பிரிவுகள் குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஐ.நா வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி, இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,

சட்டவாளர் இல்லாத நிலையில், ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு, அனுமதிக்கும் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் குறித்து ஐ.நா கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். “நாம் பல விடயங்கள் குறித்து கரிசனைகளை எழுப்பியுள்ளோம். சட்டவாளர்கள் இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவது, அனைத்துலக சட்ட நியமங்களின் படி 48 மணிநேரமாக உள்ள ஆரம்ப தடுப்புக்காவலை 72 மணித்தியாலங்களாக அனுமதிப்பது உள்ளிட்ட விடயங்களில் புதிய வரைவு கவலை தருகிறது” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

chineseகுறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சீன பிரஜைஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையில் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

நி மா சி ரென் என்ற சீனரே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பிலுள்ள முன்னணி கசினோ நிலையம் ஒன்றில் பணியாற்றியிருந்தார். முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றவே தாம் இலங்கை வந்ததாக குறிப்பிட்ட சீனர் தெரிவித்திருந்தார். எனினும், அவர் சீன சூதாட்டக்காரர்களால் நடத்தப்படும் கசினோ நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கைது செய்யப்பட்டபோது, இவரது சுற்றுலா நுழைவிசைவு காலாவதியாகியிருந்தது என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more