Header image alt text

tttttttttஇலங்கை – ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல் நேற்று கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அழைப்பின் பேரில், ஜப்பானிய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவொன்று இந்த கலந்துரையாடலில் பங்கேற்றது.

இந்தக் கலந்துரையாடலில் இருதரப்பு மற்றும் பரஸ்பர நலன்கள், முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டுள்ளது. இலங்கை தரப்பில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். Read more

p1400473சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த 03.12.2016 சனிக்கிழமை யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி சரஸ்வதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வின் பிரதம விருந்தினரான வட மாகாண அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களும், சிறப்பு விருந்தினர் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினராக சட்டத்தரணி செல்வி ஞானலோஜினி சிவஞானம் மற்றும் சமூக சேவகர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்வின்போது ஆசியுரையினை யாழ் சின்மயா மிசன் ஆச்சாரியார் யாக்ரத சைத்தன்ய சுவாமிகள் அவர்கள் வழங்கினார். Read more

hஎமது புலம்பெயர் உறவான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கெங்காதரன் ஞானசக்தியின் புதல்வன் நிதுஜன் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்திற்க்கு சமையல் பாத்திரங்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் ஊடாக அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன.

நீண்டகாலமாக பாரதி இல்ல சமையல் கூடத்திற்க்கு தேவையான பாத்திரங்கள் போதாமையாக இருந்து வந்துள்ள குறையின் பெரும் பகுதியை இன்று தங்களது புதல்வனின் நிதுயனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களது பெற்றோர்களால் தீர்த்து வைக்கபட்டுள்ளதையிட்டி நிதுயனுக்கும் அவர்களின் பெற்றோருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இல்ல சிறார்கள் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிதுயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழத்துக்களையும் கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்). Read more

sahala-ratnayakeநான்காம் மாடி தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர். ஆகையால் பொலிஸ் குற்ற விசாரணை திணைக்களம் (சி.ஐ.டி), கட்டாயம் மாற்றப்படவேண்டும் என்று அரசாங்கம், நேற்றுத் தெரிவித்துள்ளது.

அத்திணைக்களத்தில், நேற்று இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சட்டம் மற்றும் ஒழுங்குகள் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பயன்படுத்தப்படும் நுட்பங்கள் மற்றும் நன்னடத்தை காரணமாக, நான்காம் மாடி தொடர்பில் ஒருவகையான அச்சநிலைமை ஏற்படும். நீங்கள் சரியோ அல்லது பிழையோ என்பது பிரச்சினையில்லை. Read more

sivasankarபுலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என, இந்தியா வின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது, இந்திய வெளிவிவகாரச் செயலராக பணியாற்றிய சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ள Choices: Inside the Making of India’s Foreign Policy என்ற நூலிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ”எந்த வடிவத்திலான அனைத்துலக நடுநிலையையும், போர்நிறுத்தத்தையும், புலிகள் விரும்பியிருந்தனர். Read more

ratnasri-wickramanaikeமுன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, உடல்நிலை பாதிப்பு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன, நேற்று செவ்வாய்க்கிழமை, வைத்தியசாலைக்குச் சென்று ரத்னசிறி விக்ரமநாயக்கவைப் பார்த்து நலன் விசாரித்துள்ளார். இலங்கையில் உயிருடன் உள்ள சிரேஷ்ட அரசியல்வாதிகளாக இந்த இரண்டு முன்னாள் பிரதமரும் காணப்படுகின்றனர்.

prabaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், வன்னி மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான விசேட பணிப்பாளராக, முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபயகோனினால், நேற்றுக் காலை வழங்கப்பட்டுள்ளது.

cheddiவவுனியா வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை சந்தை கடைத்தொகுதி வழங்குவதற்கான கேள்வி கோரலை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி பொதுமக்கள் இன்று காலை 9மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபையினால் நெல்சிப் வேலைத்திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சந்தைக்கட்டிடத் தொகுதிக்கான மாவட்ட மட்ட கேள்வி கோரலை உடனடியாக இரத்தச் செய்து பிரதேச எல்லைக்குள் வழங்கக்கோரி செட்டிகுளம் பிரதேசவாழ் மக்கள் இக் கவனயீர்ப்பப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளுர் வியாபாரிகளின் வயிற்றில் அடிக்காதே, செட்டிகுளம் பிரதேச சபை அதிகாரிகளே எமது பிரதேச கடைத் தொகுதியை எமது பிரதேச மக்களுக்கு வழங்கு என பல்வேறு வசனங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. Read more

pandnkattuதென் கடல் பகுதியில் ‘கட்டுவலைத் தொழிலை’ மேற்கொண்டு வரும் மன்னார் பனங்கட்டிக்கொட்டு மற்றும் அயல் கிராம மீனவர்களின் கட்டு வலைகளை கடலில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை இன்று மன்னார் கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பனங்கட்டிக்கொட்டு கிராம மக்கள் இன்றுகாலை 6.15 மணிமுதல் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் பிரதான பால வீதியில் இன்று காலை 6.15 மணியளவில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை 6.15 மணிமுதல் மன்னாரில் இருந்து வெளிமாவட்டத்திற்கு செல்லும் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டது. அரச பேருந்துகளையும் இடைமறித்து தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். Read more