Header image alt text

ananthi sasitharanயுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் குறித்து அரசாங்கம் உரிய பதிலளிக்காவிடில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22ம் திகதி முதல் தான் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், பாதுகாப்பு தரப்பிடம் சரணடைந்த தனது கணவர் உள்ளிட்ட குழுவினர் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை எனவும் அனந்தி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனந்தி சசிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

china president and ranilஇலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று உலக பொருளாதார மாநாட்டின் தொடக்க நிகழ்வுக்கு முன்னதாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது இலங்கையில், சீனாவின் முதலீடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக, அம்பாந்தோட்டை துறைமுகம், கைத்தொழில் முதலீட்டு வலயம் மற்றும், கொழும்பு நிதி நகரத் திட்டம் என்பன தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும், சீன அதிபருடன் இலங்கை பிரதமர் பேச்சு நடத்திய அதேவேளை எதிர்கால முதலீடுகள் தொடர்பாகவும், Read more

policeபதில் பொலிஸ்மா அதிபராக பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு இன்று நேபாளுக்கு சென்றுள்ளதால் பதில் பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கத்மாண்டு நகரில் இடம்பெறவுள்ள ஆசிய வலய பொலிஸ் பிரதானிகளின் மாநாட்டில் கலந்துகொள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேபாளம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

dfdவஸ்கமுவ தேசிய பூங்காவில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில், 38 வயதுடைய நபரொருவர் பலியாகியுள்ளார். வனவிலங்கு அதிகார சபை அதிகாரிகளுக்கும், வேட்டையாடுபவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போதே, குறித்த நபர் பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, வனவிலங்கு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, வேட்டையாடுபவர்களுடன் தொடர்பை பேணி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், வனவிலங்கு அதிகாரியொருவரும் கைது செய்யப்பட்டார். Read more

ezhuka thamilகிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும் என தமிழ் சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையினால் தமிழர் தேசம், பிரிக்கப்படாத வட- கிழக்கு தமிழர் தாயகம், இறைமை, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான இணைந்த வடக்குக் கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம் என்பதை வலியுறுத்தி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணியில் பங்குபெற்றுவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

மேலும் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், தமிழ் மக்களின் அபிலாசைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் இந்த எழுக தமிழ் பேரணி முக்கியத்துவம் பெறுகிறது. இச் சந்தர்ப்பத்தில் வடக்குக் கிழக்கு மக்களின் ஒன்றித்த குரலாக இப்பேரணி அமைய வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். Read more

dsfdவவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணி இராணுத்தால் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமாரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் இக்காணின் உரிமையாளர்கள் தொடச்சியாக தமது காணிகளை மீள் ஒப்படைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் 22 ஏக்கர் காணியை இராணுவம் கையளித்துள்ளது.

மிகுதி 2 ஏக்கர் காணி இராணுவ வசமுள்ளது. கடந்த யுத்த காலத்தில் ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் இருந்த இப்பகுதி 60 பேருக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியாக காணப்பட்டிருந்தது. Read more

IMG_1264பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில், வவுனியா வடக்கு இளைஞர் சேவை அதிகாரி திரு. சதீஸ்குமார் தலைமையில் நேற்று முன்தினம் (15.01.2017)மாலை 4.30 மணிக்கு நெடுங்கேணி பெரியமடு பொதுநோக்கு மண்டபத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு அதிதிகளாக வட மாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான திரு ஜி.ரி லிங்கநாதன் அவர்களும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read more

former LTTEகிளிநொச்சியில் உள்ள, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என தெரிவித்து, வடமாகாண ஆளுநரிடம், முன்னாள் போராளிகள் மகஜர் கையளித்துள்ளனர். கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொங்கல் விழா, கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் அமைந்துள்ள வட்டக்கச்சி வயல் பண்ணையில் இன்று இடம்பெற்றது. இதன்போதே முன்னாள் போராளிகள், ஆளுநரிடம் மகஜர் கையளித்தனர்.

அத்துடன், வேலைவாய்ப்பு கோரி, ஆளுநருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர் இதன்போது, கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, குறித்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று சுமூகமான தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தொண்டராசிரியர்களுக்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டதாகவும் மிக விரைவில் அவர்களுக்கான தீர்வு கிடைத்துவிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

IMG_1086தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் “youth got talent”  மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில், காத்தார் சின்னக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உதயதாரகை இளைஞர் கழகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிதி மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிறைவுபெற்ற மைதான புனரமைப்பு திறப்பு விழா அண்மையில் உதயதாரகை இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.அருண்குமார் தலைமையில் கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் அதிதிகளாக வட மாகாண சபை உறுப்பினர் திரு செ.மயூரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இளைஞர் சேவை அதிகாரி திரு அஜித் சந்திரசேன, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன் Read more

sahalaசட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க ஜேர்மனியின் முதலாவது துணை ஜனாதிபதி றெயின்கோ ல்ட் பொக்லட் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் போல் றூபிக் ஆகியோரை சந்தித்து நட்புறவு ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை மியூனிச் பெபேரியா பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது இருதரப்பு தொடர்பில் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச ஜனநாயகவாதிகளின் சங்கத்தின் (IDU) 2017 ம் ஆண்டுக்கான நிறைவேற்று கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சாகல ரத்னாயக்க ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ளார்.