Header image alt text

weweweJaffna District Tamil National Alliance (TNA) Parliamentarian and Leader of People’s Liberation OrganiZation of Tamil Eelam (PLOTE) Dharmalingam Sithadthan said there are positive signals in obtaining land and Police powers to the provinces. “Police and land powers are very important. There are positive signals on these matters. Power sharing is positive. We are in discussions with the government and hopefully we might be able to reach an agreement,” he said. Following are excerpts of the interview: Read more

vna-ccதமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக்குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் நேற்று (02.01.2017) திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரையில் கட்சியின் வவுனியா மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தினை கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து இன்றைய அரசியல் நிலைமைகள் சம்பந்தமாக தீவிரமாக ஆராயப்பட்டது. அத்துடன் அரசியலமைப்பை மாற்றும் முயற்சிகள் சம்பந்தமாகவும் இதன்போது விரிவாக பேசப்பட்டது. இதன்போது தீர்வு விடயத்திலே மக்கள் மத்தியில் நம்பிக்கையீனம் இருந்தாலும் இதற்கு ஒரு முடிவ வரும்வரையில் நாம் அதற்கான முயற்சியைத் தொடரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதோடு, அரசியலமைப்ப விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் முழுமையாக ஆதரவு கொடுத்து செயற்பட வேண்டும் என்று மேற்படி கட்சிச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. Read more

p1410050இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 117ம் ஆண்டு சிரார்த்த தின விழாவும், கண்ணகை முன்பள்ளிக்கான நிரந்தர கட்டிட திறப்பு விழாவும் புதுவருட தினமான 01.01.2017 திங்கட்கிழமை முற்பகல் 10.00மணியளவில் ஏழாலை அருள்மிகு கண்ணகை அம்பாள் தேவஸ்தான வடகரை வீதியில் இராவ்பகதூர் சி.வை தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த சபையின் தலைவர் திரு. இ.பேரின்பநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், ச.கிருபானந்தன் (உதவிக்கல்விப் பணிப்பாளர் -முன்பள்ளி, வலிகாமம் கல்வி வலயம்), ச.சுதர்சன் (செயலாளர், வலிதெற்கு பிரதேசசபை) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். Read more

p1400938ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மற்றும் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கின்ற நிகழ்வு புதுவருட தினத்தற்கு 01.01.2017 முற்பகல் 9மணியளவில் சுன்னாகம் சணச வங்கி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது மேற்படி மாணவர்களுக்காக பணம் வைப்பிலிடப்பட்ட புத்தகங்களும், சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். சணச வங்கியின் வடக்கு கிழக்கு பிராந்திய பொது முகாமையாளர் சிவகுமார், மற்றும் சணச வங்கியின் சுன்னாகம் கிளை முகாமையாளர், யாழ் மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் இரகுநாதன், தென்னிந்திய திருச்சபை சார்பில் அருட்தந்தை பிசப் தியாகராஜா ஆகியோரும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர். அருட்தந்தை தியாகராஜா அவர்கள் ஆசியுரை வழங்கினார். Read more

vcvcvcvcvvv“புதியபாதை “ஊடாக புதிய சிந்தனையை தந்த சிந்தனை சிற்பி தோழர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) 35வது நினைவுதினம் இன்றாகும். 1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி சித்திரா பதிப்பகத்தில் வைத்து விடுதலை புலிகளினால் அரங்கேற்றப்பட்ட முதல் சகோதரப்படுகொலை கட்டவிள்த்து விடப்பட்ட நாளும் இதுவாகும். தோழர் சுந்தரம் அவர்கள் தமிழீழ விடுதலையை மக்கள் விடுதலை மூலமே அடைய முடியும் என்ற கோட்பாட்டுடன் “புதியபாதை” ஊடாக பொதுவுடமை கொள்கைளையும், புரட்சிகர சிந்தனையையும் ஊட்டிய சிறந்த சிந்தனை சிற்பி.
விடுதலை போராட்டம் வெறுமனவே ஆயுதப்போராட்டத்தில் மத்தியில் தங்கியிருக்க முடியாது, மக்களை அரசியல் மயப்பபடுத்தி முழுமையான மக்கள் போராட்டம் மூலமே அடையமுடியும் என்பதில் அசைக்கமுடியாத தன்னம்பிகை;கையை கொண்ட வீரன். தோழர் சுந்தரம் ஊடகவியலாளர், பொதுவுடமைவாதி, சிறந்த இராணுவதளபதி என்ற முற்பரிமாணம் கொண்ட செயல்வீரனாகவே செயலாற்றிய வீரன் ஆகும்.

Read more

15826606_723657801141523_5825987583049105067_nஇலங்கையின் முன்னைநாள் பிரதமர் அமரர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அவர்களின் அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்குகள் நேற்று 31.12.2016 சனிக்கிழமை ஹொரணையில் இடம்பெற்றது. இறுதி சடங்கில் மதத் தலைவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னைநாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, எதிர்கட்சி தலைவர் இராசவோதயம் சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் கலந்து கொண்ருருந்தனர்.

இவ் நிகழ்வில் புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்ததோடு மறைந்த முன்னைநாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அவர்களின் புதல்வர் விதுர விக்கிரமநாயக்கவிடம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார். அரமரர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அவர்களின் பூதவுடல் அன்று பிற்பகல் 1:30 மணியளவில் அவரது ஹொரணை இல்லத்தில் இருந்து ஹொரண பொது விளையாட்டரங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டதோடு, அங்கு சமய சடங்ககள் இடம்பெற்று அரச மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
Read more

kalvi0பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில், நியூ லைன் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும், திருகோணமலை மூதூர் கலைமகள் இந்துக் கல்லூரியின் ஆசிரியருமான திரு சதீஸ்குமார் தலைமையில்  இன்றையதினம்(31/12/2016) மாலை 4.00 மணிக்கு கழகத்தின் மைதானத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு   வெகு சிறப்பாக நடைபெற்றது.

Read more

addan01அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா பகுதியில் டிக்கோயா அம்மன் ஆலயம், வனராஜா மேல்பிரிவு மருதவீரன் ஆலயம், வனாராஜா விநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் இன்று (01) அதிகாலை அடையாளம் தெரியாதவர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்கோயா வனராஜா ஆலயத்தில் திருடும் போது அந்தக் காட்சி கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கமராவில் மிகத்தெளிவாக பதிவாகியுள்ளன. Read more

thurukiஇரவு விடுதி ஒன்றில் புத்தாண்டை கொண்டாடிய மக்கள் மீது கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து வந்த தீவிரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்தான்புல்லில் உள்ள இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென துப்பாக்கிச் சப்தம் கேட்டது. அப்போது ஆயுதங்களுடன் அங்கு வந்த தீவிராவதிகள் சரமாரியாக சுட்டத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more