Header image alt text

 

யாழ்ப்பாண குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொஸிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்று இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த குழுக்களின் பெரும்பாலானவை வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

anpakamதமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் ஜெர்மனில் வசிக்கும் திரு&திருமதி ராகவன் தேவகி குடும்பத்தினரால்   04/02/2017 சனிக்கிழமை அன்று முழு நாளுக்குமான விசேட உணவும், பழங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இன்றைய மதிய உணவு வழங்குகின்ற இவ் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது. 

Read more

puzhiyamkuzham01தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் “Youth Got Talent – 2016” மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கு  பிரதேச செயலக பிரிவில், புளியங்குளம் வடக்கு  கிராம சேவையாளர் பிரிவில் புரட்சி  இளைஞர் கழகம் மற்றும்  தேசிய இளையர் சேவைகள் மன்றத்தின் நிதி மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிறைவு பெற்ற மைதான புனரமைப்பு, சுற்றுவேலி  நிர்மாணம்  என்பவற்றின் திறப்பு விழா அண்மையில் இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் இளைஞர் சேவைகள் அதிகாரி திரு சதீஸ் தலைமையில் நடைபெற்றது. 

Read more

vijalendran mpவடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கிழக்கிலும் வெகுவிரைவில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக த.தே.கூ கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் (உபதலைவர்) அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் மாஞ்சோலை கலாசார மண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், Read more

maithiriவளமான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஊழல், மோசடிகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக உண்மையானவர்களாக செயற்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி தனதுரையில் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி தனது உரையில் தொடர்ந்து கூறியதாவது, Read more

jaffna 04.02.17இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினம் தலைநகர் கொழும்பில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட அதேவேளை, வடக்கில் யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் இந்த சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு துக்க தினமென தெரிவித்து கறுப்பு கொடி கட்டி போராட்டம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

வட மாகாண சபையின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், க.சவர்வேஸ்வரன், அனந்தி சசிதரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உள்ளுராட்சி மன்றங்களின் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர். Read more

RTIஇலங்கை மக்கள் அரசின் தரவுகளை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் தகவல் அறியும் உரிமை சட்டம் நேற்று முதல் அமூலாகியுள்ளது.

அரசின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மையை அதிகரிக்கும் இந்த புதிய சட்டத்தின் மூலம் அரசின் தரவுகளை பெற மக்களுக்கு தரப்படும் வழிவகை என்பது இலங்கையில் ‘ஜனநாயகம் திரும்பிவிட்டது’ என்பதை உணர்த்தும் சமிக்ஞை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more

vikiவடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாமல் கூட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் ‘நாம் அனைவரும் இலங்கையர்’ என்று கூறுவது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கருத்துக்கு பதில் வழங்கும் முகமாகவே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார். Read more

ramarவவுனியா சாந்தசோலை  ஸ்ரீ இராமர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா (03.02.2017) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல்  பிரதிஷ்டா பிரதம குரு “சிவாகம பூஷணம்” சிவஸ்ரீ மு.இ.வைத்தியநாதக் குருக்கள் அவர்களின் தலைமையில் கிரியைகள்  வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பரிபால சபையினரினதும், ஊர் மக்களின் அயராத உழைப்பினாலும் இன்றையதினம் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா கிரியைகள் மிக சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

Read more

Sivajilingamஐந்து அம்சகோரிக்கையை முன்வைத்து 69வது சுதந்திர தினமான 04.02.2017 சனிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக கறுப்புப் பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாளை சனிக்கிழமை 69வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், காணாமல் போனவர்கள் விடயம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு, மீளக் காணிகள் சுவீகரிக்கப்படக் கூடாது, இனப்படுகொலைக்கு நீதி, சர்வதேச விசாரணை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து காலை 8 மணிமுதல் 10 மணிவரை அமைதியான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார். Read more