Header image alt text

oddusuddan1117/04/2017 அன்று ஒட்டுசுட்டான் ஆதிகணபதி அறநெறி பாடசாலையின், புதுவருட விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாகாணசபை உறுப்பினர் கௌரவ க.சிவநேசன், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளார் அனிருத்னன, வைத்திய அதிகாரி நிரேக்கா பிரகலாதன்  கலாச்சார உதியோகத்தர் கிரிசாந்தி, கிராமசேவையாளர்கள் சோபனா & மேஹலா,  மற்றும் அயல்பாடசாலை அசிரியர்கள் எனபலர் கலந்துகொண்டனர்.

Read more

P1430270யாழ். கைதடி மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் மகளீர் தின நிகழ்வு இன்று (17.04.2017) திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில் கைதடி மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் இடம்பெற்றது. 
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக  வைத்தியக்கலாநிதி திருமதி சி.பஞ்சராஜா (சிரேஸ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவத்துறை, யாழ். பல்கலை), திருமதி. த.சங்கீதா (முகாமையாளர், இலங்கை வங்கி, கைதடி), ஆகியோரும்,

Read more

kantharodai02கந்தரோடை விளையாட்டுக் கழகமும், கந்தரோடை மக்கள் முன்னேற்ற இளைஞர் கழகமும் இணைந்து நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வு 14.04.2017 வெள்ளிக்கிழமை யாழ். கந்தரோடையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் அதிதிகளாக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தலைவர் பிரகாஸ், யாழ் மாவட்ட இளைஞர் சேவைகள் மனற்றத் தலைவர் காமராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

IMG_0584வவுனியா ஆசிகுளம் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கழகத்தின் தலைவர் திரு பி.ரஞ்சித்குமார்  தலைமையில் 16.04.2017 அன்று வெகுசிறப்பாக விளையாட்டுகழக மைதானத்தில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும், PLOTE வட மாகாண சபை உறுப்பினர்  DPLF    நிறைவேற்றுக்குழு  உறுப்பினருமான,  திரு G.T.லிங்கநாதன்(விசு) அவர்களும்

சிறப்பு விருந்தினராக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா (PLOTE), DPLF உபதலலைவர்களில் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். Read more

mulai02jpgன்று வடமாகாணசபை உறுப்பினர் திரு கந்தையா சிவநேசன் , வன்னி மேம்பாட்டுப்பேரவை தலைவர் தவராசா ஆகிய இருவரும் முள்ளிவாய்க்கால் மேற்கு மற்றும் கிழக்கு பிரதேச மக்களை சந்தித்து அவர்களுடைய வாழ்வாதாரம் சம்பந்தமாகவும் மக்களின் பற்றாக்குறைகள் பற்றியும் அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்  Read more

uthayan09உதயன் தமிழ் நாளிதழ் நடாத்திய சித்திரைப் புதுவருட விழா 2017 நிகழ்வானது யாழ். சுழிபுரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் கோயிலடியில் நேற்று (15.04.2017) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ் . மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், பல கல்விச் சமூகத்தினரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

chulipuram01யாழ். சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டுக் கழகத்தின் மாணவர்களுக்கான கௌரவிப்பும், பரிசளிப்பு விழாவும் நேற்று (15.04.2017) சனிக்கிழமை பிற்பகல் 6.30மணியளவில் றாத்தலடி கலைமகள் கலையரங்கில் கலைமகள் விளையாட்டுக்கழகத் தலைவர் செல்வன் வ.கோகுலநேசன் தலைமையில் நடைபெற்றது. Read more

viyaparimulai09யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையத்தின் கல்விக் கௌரவிப்பு நிகழ்வு வியாபாரிமூலை நாச்சிமார் ஆலய முன்றலில்  (14.04.2017) மாலை 4.30 மணியளவில் உயர் தொழிநுட்பவியல் நிறுவன முன்னாள் பணிப்பாளர் திரு.க.கதிரமலை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு. சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் க.தர்மலிங்கம், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புஸ்பலிங்கம், பிரதேசசபை செயலாளர் சி.ஸ்ரீபாஸ்கரன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழக கணினி விஞ்ஞான சிரேஸ்ட விரிவுரையாளர் சோ.சுதாகர், இளைப்பாறிய அதிபர் ந.பரமானந்தம், சமாதான நீதவான் கலாபூசணம் ஏ.என்.எஸ். திருச்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். Read more

kuppai01கொழும்பு மாவட்டம் கொலன்னாவ பிரதேசத்திலுள்ள மீதொட்டுமூல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை சடலங்களாக மீட்கப்பட்ட 19 பேரில் 7 பெண்களும் 5 சிறுவர்களும் அடங்குவதாக இராணுவம் தெரிவிக்கின்றது.
சம்பவத்தின் பின்னர் அந்த பகுதியை சேர்ந்த சிலர் காணாமல் போயுள்ள நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் இவர்கள் சிக்கியிருக்கலாம் என கருதப்படுவதாக உறவினர்கள் கருதுகின்றனர். Read more

keppapula08கேப்பாப்புலவு மக்கள் இன்றைய தமிழ் சிங்கள புத்தாண்டை புறக்கணித்து கருப்பு ஆடை அணிந்து கழுமரம் ஏறி துக்கதினமாக அனுஸ்டித்தனர் இவர்களின் இந்த போராட்டத்தில் கௌரவ மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன் மற்றும் ரவிகரனும் கலந்து கொண்டனர். Read more