Header image alt text

IMG_5534வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சி. சிவபாக்கியம். இவரது கணவர் நடக்கமுடியாமலும், கண் பார்வையற்றவராகவும் உள்ளார். அவருடைய இரண்டு பெண் பிள்ளைகளும் மாணவர்களாக உள்ளனர். இவர் சிதம்பரபுரம் வைத்தியசாலை முன்பாக சிறிய பெட்டிக்கடை வியாபாரம் செய்து குடும்பத்தை பேணி வருகிறார். தனது வியாபாரத்தை விரிவாக்கும் நோக்குடன் புளொட் அமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மூலம் உதவி கோரியிருந்தார். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட புளொட் அமைப்பின் லண்டன் கிளை உறுப்பினர் திரு. த. சிவபாலன் அவர்கள் ரூ 20000/- ஐ நன்கொடையாக வழங்கியுள்ளார். Read more

amnesty internationalaகாணாமல்போனோர் தொடர்பான பணியகத்தை எவ்வித தாமதங்களுமின்றி இலங்கை அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய இயக்குரநர் பிராஜ் பட்நாய்க் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையர்களின் காயங்களை நீதியால் மாத்திரமே குணப்படுத்த முடியும். அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் ஏற்கனவே நீண்ட காலமாக காத்திருக்கின்றன. இந்த நிலையில், அவர்களால் மேலும் நீண்ட காலத்துக்கு காத்திருக்க முடியாது என்றும் பிராஜ் பட்நாய்க் குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தில் பால்நிலை சமத்துவதும் பேணப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது

sddsநாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை முடிவுக்குக் கொண்டுவர அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து உடனடியாக பணிப்பகிஷ்கரிப்பை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டது. ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என தாம் நம்புவதாகவும் நோயாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

valluvar01இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளை தமிழர் பகுதிகளில் நிறுவும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக  கடந்த 16.06.2017 அன்று முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் VGP நிறுவனத்தின் தலைவர் உட்பட சுமார் 30 பேர் வரையில் தமிழகத்தில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டிருந்தனர். மேலும் வடமாகாண சபையின் முல்லை மாவட்ட உறுப்பினரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளருமான க.சிவநேசன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கு பற்றியிருந்தனர். நிகழ்வில் திருவுருவச்சிலை குறித்த நினைவுக்கல் பதித்தல், விழாவுக்கு வருகைதந்திருந்த பிரமுகர்களுக்கான விருந்தோம்பல் ஆகியவற்றுக்கான செலவினை சுவிஸ் நாட்டிலிருந்து புளொட் தோழர்கள் செல்வபாலன், மனோ, தீபன், ராஜேந்திரம் ஆகியோர் பொறுப்பேற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

world bankஇலங்கையின் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக 10கோடி அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியின் மூலம் உயர் கல்வி பெறும் மாணவர்கள் பெரிதும் நன்மை அடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக வங்கியினால் 115 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கல்வி தொடர்பான நடவடிக்கைகளில் இலங்கை 88ஆவது நாடாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.