வட மாகாண சபையில் அண்மையில் நிலவிய கொதிநிலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவினை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பலரின் வாய்க்கு அவலாக அமைந்திருந்தது. எக்காரணம் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உடைவினை அனுமதிக்கப்போவதில்லை எனக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சிக்கும், வட மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சமரச முயற்சிகள் பற்றியும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உடைவு தவிர்க்கப்பட்டது பற்றியும் தினகரன் வாரமஞ்சரிக்கு மனம் திறக்கின்றார்…. -(வாசுகி சிவகுமார்)-
வட மாகாண முதலமைச்சரின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம், அவரைப் பதவி விலக்குவது தொடர்பாக வடக்கில் இருந்த கொதிநிலை சற்றே தனித்திருக்கின்றது. தற்போதைய சுமுக நிலை ஏற்படுவதற்குக் காரணமாயிருந்தவர்களில் நீங்களும் ஒருவர். வடமாகாண சபையில் மீண்டும் இயல்புநிலை தோன்றிவிட்டதா?
இப்போதைக்கு முதலமைச்சரின் மீது என்ன காரணத்துக்காக நம்பிக்கையில்லாhத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதோ, அது தீர்க்கப்பட்டு விட்டது. தமிழரசுக்கட்சி அதன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை வாபஸ் பெற்றுவிட்டது. விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய குற்றம் சாட்டப்பட்;டவர்களை விலக்கி குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை நிபந்தனையின்றி தொடர்ந்தும் பதவியில் நீடிக்கச் செய்வது தொடர்பில் சிக்கல்கள் தற்போது இல்லை. ஏனைய இரு அமைச்சர்கள் மீதும் விசாரணைகளை நீடிப்பதா இல்லாயாவென்பது மற்றொன்று. அது முதலமைச்சர் விரும்பினால் தொடரப்படக்கூடியது. Read more