Header image alt text

Geneva UNஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கத்திற்கென விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் கடந்த 2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது இதனை நடைமுறைப்படுத்துவதற்கே இந்த விசேட குழு அமைக்கப்படவுள்ளது. Read more

asdsdsஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரை விடுதலைசெய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாது போனமையே இதற்குக் காரணம் என, பாகிஸ்தான் ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இப்ராகிம் கலில் மற்றும் ஒபிய்துல்லா ஆகிய இருவரே விடுவிக்கப்பட்டுள்ளனர். Read more

money paidஇவ் வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 22 அரச அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலஞ்சம் பெற முற்பட்டதாக 29 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அந்த ஆணைக்குழு, அது குறித்த 20 சுற்றிவளைப்புக்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. Read more

battiஇலங்கையில் போர்க் காலத்தில் புதைக்கப்பட்டிருந்த 12 இலட்சத்து 72 ஆயிரம் நிலக் கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போருக்கு பின்னர் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணி வெடி அபாயமற்ற முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Read more

8northவட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மாகாண சபை உறுப்பினர்களால் உத்தியோகபூர்வமாக ஆளுநரிடம் இருந்து மீளப்பெறப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் அஸ்மின் அயூப் ஆகியோர் இன்று புதன்கிழமை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் இருந்து மனு ஒன்றினை கையளித்ததன் ஊடாக நம்பிக்கை இல்லா பிரேரணையினை மீளப்பெற்றுக்கொண்டனர். Read more

Untitledவடமாகாணத்தின் கல்வி மற்றும் விவசாய அமைச்சராக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பதவிப்பரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வடமாகாணத்தின் விவசாய அமைச்சராக இருந்த ஐங்கரனேசன் மற்றும் கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா ஆகியோர் பதவிகளை இராஜனாமா செய்ததையடுத்து, அந்தப் பதவிகளை தலமையமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார். Read more