Jun 17
6
Posted by plotenewseditor on 6 June 2017
Posted in செய்திகள்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது நாடாளுமன்றத்தினுடைய ஏழாவது அமர்வுகள் கடந்த வாரம், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் நடைபெற்றன. இந்த அமர்வினில் சிறப்பு அதிதியாகப் பங்கேற்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட்டினதும் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், நேரடியாக அந்த அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாத சூழலில், அவர் காணொளி மூலம் உரையாற்றினார். அந்த உரை கீழே தரப்பட்டுள்ளது:
Read more