தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் 43ஆம் வருட நினைவுதினம் இன்றாகும். அன்னாரின் நினைவுதின நிகழ்வு உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபிக்கு அருகாமையில் இன்றுகாலை 9.30மணியளவில் நடைபெற்றது.
இதன்போது நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அன்னாரின் உருவப்படத்திற்கும், உருவச் சிலைக்கும் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.