Header image alt text

northern_provincial_council1தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராஜா ஆகிய இருவரும் பதவிவிலக வேண்டும் என்று ஊழல், மோசடி தொடர்பில் விசாரிக்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு பரிந்துரைத்த போதும் அந்த இருஅமைச்சர்களும் உடனடியாகப் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை என்று வடக்கு மாகாணசபை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் முதலமைச்சருக்கு நெருக்கடிஅதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Read more

cm-meet-with-euபுதிய அரசியலமைப்பில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாத நிலையில், பழைய நிலமையிலேயே இன்னும் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புரிமை கொண்ட 17 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று புதன்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். Read more

iranஇரானின் தலைநகர் தெஹ்ரானில் நடந்த இரு தாக்குதல்களில் பன்னிரெண்டு பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. நாடாளுமன்றத்திலும், இரானின் இஸ்லாமிய குடியரசின் நிறுவனரின் சமாதியிலும் தாக்குதல் நடந்துள்ளது.

பெண் வேடமணிந்த ஆயுததாரிகள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து சுட்டிருக்கிறார்கள். ஒரு தாக்குதலாளி தனது வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்ததாக இரான் கூறியுள்ளது. Read more

kathar01சௌதி அரேபியா உட்பட மத்திய கிழக்கின் ஆறு நாடுகள் கத்தாருடன் முரண்பட்டுள்ளமை அங்கு பணி புரியும் இலங்கையருக்கும், கத்தார்-இலங்கைக்கு இடையிலான ராஜிய உறவுகளுக்கும் தொடர்புடைய விஷயமல்ல என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கத்தார் ரியலை இலங்கை நாணயமாக மாற்றும் நடவடிக்கைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்றும். Read more