Header image alt text

shantha_Bandaraபுதிய அரசியலமைப்பை உருவாக்கும் குழுவின் இடைக்கால அறிக்கையை ஆய்வு செய்ததன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியினால் பிரதான முன்று விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாக ஸ்ரீPலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறுகையில். Read more

Gotabaya-Rajapaksaவிக்கினேஸ்வரன் இனவாதம் பேசுவதை கண்டுகொள்ளாத அரசாங்கம் எம்மை மாத்திரம் இனவாதிகளாக சித்தரிகின்றனர். பொதுபல சேனாவை போன்றே வடக்கின் இனவாதிகளும் செயற்படுகின்றனர். ஆனால் அவர்களை கைதுசெய்ய மாட்டார்கள், போதுபல சேனா அமைப்பினருக்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்புகளும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Janasaraaதான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்க கோரி பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்; ஞானசார தேரரினால் அடிப்படை உரிமை மனு ஒன்று அவரின் சட்டத்தரணியின் ஊடாக உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தல் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் திட்டமிடப்பட்ட குற்றப் பிரிவினர், முறையான நடவடிக்கையின்றி தன்னை கைது செய்ய முற்படுவதாக தனது மனுவில் ஞானசார தேரர் கூறியுள்ளார். Read more

hisbullaநாட்டில் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும் பேரினவாத குழுக்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, தலைசிறந்த புலனாய்வு வலையமைப்பைக் கொண்ட இலங்கை பொலிஸாரினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்ய முடியாதுள்ளமை எமக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். Read more