புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்களும், ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று முற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 28 June 2017
Posted in செய்திகள்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்களும், ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று முற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 28 June 2017
Posted in செய்திகள்
உள்ளூராட்சித் தேர்தல் சட்டம் சம்பந்தமான தொழில்நுட்பப் பிரச்சினைகள், ஜூலை மாதத்துக்குள் தீர்க்கப்படுமாயின், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, இவ்வாண்டு இறுதிக்கும் நடத்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுத் தெரிவித்தது. நேற்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சந்தித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் உள்ளன என்றும் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 28 June 2017
Posted in செய்திகள்
பேஸ்புக் ஊடாக நபர்களிடம் நிதி மோசடி செய்த 25ற்கும் அதிகமான வெளிநாட்டவர்களை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நைஜீரியா மற்றும் உகண்டா நாடுகளைச் சேர்ந்தவர்ளே இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 28 June 2017
Posted in செய்திகள்
சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவில்லை என வடமாகாணத்தில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கான ஆதரவினை கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் வழங்கி வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி சுகாதார தொண்டர்களும் கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர் போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார தொண்டர்கள் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கிளிநொச்சி சுகாதாரத் தொண்டர்கள் ஆகிய நாம் நாளைய தினம் வடமாகாண ஆளுனரை சந்திக்க உள்ளோம் அவர் எமக்கு சுமூகமான பதிலை அளிக்காவிட்டால் எமது கவனயீர்ப்புப் போராட்டம் தீர்வு கிடைக்கும் அவரை தொடரும் எனத் தெரிவித்தனர். அத்துடன் தாம் 1992, 1997 களில் இருந்து பலதரப்பட்ட கஷ்டங்களின் மத்தியில் தொண்டர்களாக பணிபுரிவதாகவும் தமக்கான நியமனங்களை சம்பந்தப் பட்டவர்கள் பெற்றுத் தாருங்கள் எனக் கோரிக்கையும் விடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.