வடமாகாணத்தின் பொருளாதார விருத்திக்கு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்கள் என இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சன்தூ வட மாகாண அரசியல் பிரமுகர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார். முறையான திட்டங்கள் வகுக்கப்படுமாயின் மாகாணத்தின் பொருளாதார விருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அமைச்சின் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் நிறைவில் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் குறிப்பிட்டார். பதவி ஏற்றதன் பின்னர் முதன் முதலாக யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கின்றார். Read more