இலங்கையில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை என அரசாங்க புள்ளி விபர திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்கள் தொடர்பாக அந்த திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.
இதன்படி கடந்த 2016 ம் ஆண்டு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டின் போது 5 முதல் 17 வயது வரை உள்ள பள்ளிக்கூடம் செல்லும் வயதில் உள்ள 4,52 661 மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more