தெற்கில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடமாகாணத்தில் சேகரிக்கப்பட்ட உலர் உணவு மற்றும் இதர பொருட்கள் இன்று தெற்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தெற்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் கடந்த சில நாட்களாக உதவிப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வந்தன.
பல பொது அமைப்புக்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினர்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் பொதி செய்யப்பட்டு இன்று நண்பகல் தெற்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. Read more