Header image alt text

sddsசய்டம் நிறுவனத்திற்கு எதிரப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் சய்டம் நிறுவனத்திற்கு எதிரப்பு தெரிவித்து நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட பரந்தளவிலான வேலை நிறுத்தம் இன்றும் இடம்பெறுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. நேற்றுக் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகிய முழு அளவிலான வேலை நிறுத்தத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. Read more

kumar gunaratnamமுன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டாளர் குமார் குணரத்னத்திற்கு இந்த நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இது குறித்த கடிதம் கிடைக்கப்பெற்றதாக அந்த கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையினதும் இரட்டைக் குடியுரிமையை பெற்றிருந்த குமார் குணரத்னத்தின் அவுஸ்திரேலிய குடியுரிமை கடந்த 31ஆம் திகதி இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதற்கு பின்னர் குமார் குணரத்னம் எவ்வித தடையுமன்றி அரசியல் நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

sfddfdகிளிநொச்சி இரணைதீவு மக்களால் பேரணியாக வந்து முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள ஏ32 மன்னார் வீதியை மறித்து தமக்கான தீர்வினை கோரி நடத்தப்பட்ட வீதிமறிப்புப் போராட்டம் பூநகரி பிரதேச செயலரின் உறுதி மொழிக்கமைய இன்றுகாலை முடிவிற்கு வந்தது.

கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான அனுமதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை கடந்த ஐந்தாம் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்திருந்தனர். Read more