Posted by plotenewseditor on 3 June 2017
Posted in செய்திகள்
நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகின்றோம் என கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊர்வலம் ஒன்றினை இன்று மதியம் மேற்கொண்டனர்.
வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 100 ஆவது நாள் இதனை முன்னிட்டு வவுனியா கந்தசாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அதனூடாக கண்டி வீதிக்கு சென்று தமது போராட்ட தளத்தை வந்தடைந்தனர். Read more