Header image alt text

missingவவுனியா பகுதியிலிருந்து காணாமல் போயிருந்த ஐவரில் மூவரை திருகோணமலையில் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஈச்சங்குளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் மூன்று முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதில் பிரபல பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் பாடசாலை சென்று வீடு திரும்பவில்லை என பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more

fireகொழும்பு-02, கொம்பனிதெரு சந்தியில், நிப்போன் ஹொட்டலுக்கு அண்மையில் உள்ள கடைத்தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு, தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் தீயணைப்பு வாகனங்கள் மூன்றும், தீயணைப்பு படையினர் 12பேரும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

udayangaரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்கன வீரதுங்கவுக்கு இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் விநியோகித்த ராஜதந்திர கடவுச் சீட்டு மற்றும் பிறிதொரு கடவுச் சீட்டு என்பனவற்றை கோட்டை நீதிமன்ற நீதிவான் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கோட்டை நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார். 2009ஆம் ஆண்டு உக்ரேனிலிருந்து மிக் போர் விமானங்களை கொள்வனவு செய்தபோது அதில் உடந்தையாக செயற்பட்டு முறையற்ற வகையில் நிதி மோசடி செய்தமை தொடர்பில் நிதி மோசடி பிரிவில் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ertrஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய பயணத் தடை அமுலாகியுள்ள நிலையில், ஆறு பிரதான இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மற்றும் அனைத்து அகதிகளும் தற்போது கடுமையான நுழைவு விதிகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

இந்த தடையின் கீழ், அகதிகள் மற்றும் குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள், அமெரிக்காவில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது வணிக ரீதியாக தொடர்புகள் இல்லாமல் இருந்தால், அமெரிக்காவுக்குள் நுழைய விசா மறுக்கப்படலாம். Read more

paffrelஇலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் இரட்டைக் குடியுரிமைக் கொண்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் அடுத்த மாதம் இறுதியில் வெளியாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனை நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இது தொடர்பான தகவல்களை வழங்குமாறு குடிவரவுப் குடிப்பெயர்வு திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளது. Read more

americaகொழும்பு நகரின் முச்சக்கர வண்டிகளில் தனிமையில் பயணிக்க வேண்டாம் என கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்கா தூதரகம் இலங்கைக்கு வருகை தருகின்ற அமெரிக்கப் பெண்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இந்நாட்டு, முச்சக்கரவண்டி சாரதிகளினால் பெண்கள் பல்வேறு வகையான பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த தூதரகம் குறிப்பிட்டுள்ளது. Read more

sddsஅரசாங்கத்திற்கு முன்வைத்துள்ள ஐந்து கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காவிடின் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் மத்திய செயற்குழு நேற்று கூடிய பின்னர் ஐந்து கோரிக்கைகளை அவர்கள் அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளனர். சைட்டம் நிறுவனத்திற்கு தொடர்ந்து மாணவர்களை இணைத்துக்கொள்வதை நிறுத்துதல், பட்டம் வழங்குவதை உடனடியாக நிறுத்துதல் போன்ற கோரிக்கைகளும் இதில் அடங்கும்.

postஅஞ்சல் சேவை ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு நேற்றைய தினத்துடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

அஞ்சல் மா அதிபர் உள்ளிட்ட பல்வேறு திணைக்களத்தின் பல்வேறு அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டதாக அஞ்சல் சேவை ஊழியர்கள் சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார். பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 3 நாட்களாக அஞ்சல் சேவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளை, அஞ்சல் நிலையங்களில் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் தேங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.