Header image alt text

krishantha de silvaஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிறிஸாந்த சில்வா, ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு பாதுகாப்பு படையணிகளின் பிரதானி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயுதம் தாங்கிய படையணிகளின் சேனாதிபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2017ஆம் ஆண்டு ஜீன் மாதம் 27ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த ஜெனரல் பதவி உயர் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

kilinochchiகிளிநொச்சி மாவட்டத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2,892 மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்து வருவதுடன் இவர்களில் 283 பேர், தமது பார்வையை இழந்த நிலையில் உள்ளனர் என்றும், கிளிநொச்சி மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 95 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டம், பலமுறை இடப்பெயர்வுடன் கூடிய பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளது. Read more

sdf100 நாட்களுக்கும் மேலாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட கேப்பாப்பிலவு மக்கள் தமது போராட்டத்தை இன்று கொழும்பில் முன்னெடுத்திருந்தனர். பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள கேப்பாப்பிலவு கிராமத்தை விடுவிக்கக்கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பை கேப்பாப்பிலவு மக்களும் சம உரிமை இயக்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். கேப்பாப்பிலவு உள்ளிட்ட வடக்கில் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. Read more

cv vigneswaranவட மாகாண கல்வி அமைச்சராக ஒருவர் நியமிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் தொடர்பில் முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் முதலமைச்சர் என்ற வகையில் தாமே முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

britishஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறியதன் பின்னரும் தமது நாட்டு சந்தையில் இலங்கைக்கான வரிச்சலுகை, தொடரும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து பெருந்தொகையான ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட பொருட்கள் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதற்காக வழங்கப்படுகின்ற வரிச்சலுகை அல்லாத பட்சத்தில், இலங்கையின் உற்பத்திகள் 10 சதவீத இலாப இழப்பை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதன் பின்னரும் இந்த வரிச்சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

dead.bodyபாடசாலை மாணவர்கள் உயிரிழக்கும் வீதம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக, தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் டொக்டர் கோதா கொட தெரிவித்துள்ளார்.

திடீர் அனர்த்தங்கள் மற்றும் டெங்கு தொற்று போன்றவற்றினால் அதிகளவான பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.