28ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) அனுசரணையில் காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் நேற்று (24.06.2017) காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினரால் கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 16 அணிகள் பங்குகொள்ளும், 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மேற்படி மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது நேற்று காரைதீவு கனகரெட்ணம் மைதானத்தில் மங்கள விளக்கேற்றலுடன் மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு அதிதிகளாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், விவேகானந்தா விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இப் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 15.07.2017அன்று இதே மைதானத்தில் இடம்பெறவுள்ளது. Read more