Header image alt text

votesஇந்த வருடத்தின் வாக்காளர் பட்டியலின் திருத்தங்களுக்கான காலம் அடுத்த மாதம் 6 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம் எம் மொகமட் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் கிராம சேவகரிடம் அது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என மேலதிக ஆணையாளர் எம் எம் மொகமட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ewrreதிராய்க்கேணி படுகொலையின் 27ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. படுகொலை சம்பவம் இடம்பெற்ற திராய்க்கேணி முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

உயிர்நீத்த உறவுகளின் உருவப்படத்திற்கு அவர்களின் உறவினர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். Read more

misமன்னார் வங்காலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தனது மகனான செபஸ்தியான் சாளியான் மார்க் (சுதே ) (வயது-14) என்ற மாணவனை காணவில்லை என குறித்த சிறுவனின் தந்தை நேற்றுமாலை வங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் மாணவன் காணாமல்போயுள்ளதாகவும், மன்னாரிலுள்ள கல்வி நிலையம் ஒன்றிற்கு வகுப்பிற்காக சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை எனவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

thalatha gaminiபுதிய நீதி அமைச்சராக தலதா அத்துகோரள இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அத்துடன், புதிய புத்தசாசன அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா தனது பதவிப்பிரமாணத்தை ஜனாதிபதி முன்னிலையில் செய்து கொண்டார். இந்த பதவிப்பிரமாணங்கள் இரண்டும் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. நீதியமைச்சர் தலதா அத்துகோரள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு மேலதிகமாக நீதி அமைச்சையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

woundedகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில், அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில், நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

குப்பைக்கு தீ வைத்தபோது அதில் இருந்த மர்மபொருள் வெடித்ததிலேயே இவ்விருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரையும் பளை வைத்தியசாலைக்கு கொணடு சென்ற போது, அங்கு நோயாளர் காவு வண்டி இல்லாததன் காரணமாக, மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவின் வாகனத்தில் ஏற்றி யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

housing schemeமீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் போரால பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, நிர்மாணிக்கப்பட்ட 78 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இவ்வீடுகளை உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளித்தார் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. Read more

DSCN0823கடந்த 23.08.2017 புதன்கிழமை வட மாகாண விவசாயம், கமநலம், கால்நடை, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல், சுற்றுலா துறைகளின் அமைச்சராக வட மாகாண ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட

புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளர் கௌரவ கந்தையா சிவநேசன் அன்றுபிற்பகல் அமைச்சின் செயலாளர் காரியாலயத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
Read more

01 (20)முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு இரண்டாம் வட்டாரம் கைவேலியில் நேற்றையதினம் (24.08.2017)உதவி வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக வட மாகாண கால்நடை, விவசாய, நீர் வழங்கள், மீன்பிடி அமைச்சர் கௌரவ கந்தையா சிவநேசன், கைவேலி சுரேஸ் குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் நிக்சன், மாதர் சங்க தலைவி காயத்ரி, புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் வே.மணியம், முள்ளிவாய்க்கால் மகளீர் அமைப்பு தலைவி கமலா, Read more

thalathaநீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more

kilinochi swordகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கிராமத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினை முற்றியதில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே வாள்வெட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். Read more