Header image alt text

strikeஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 08.00 மணி முதல், நாடளாவிய ரீதியில், 24 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

மேலும், இவர்களுடன் வேறு சில சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

deportedசட்டவிரோதமான படகின் மூலமாக நியூசிலாந்துக்கு செல்வதற்காக, தங்கியிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த 28 பேர், இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் தங்கியிருந்த நிலையிலேயே, நாட்டுக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். Read more

akkarai villageயாழ். வலிகாமம் மேற்கு, இடைக்காடு, அக்கரை கிராம மக்களின் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அக்கரை கடற்கரைப் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியை மூடுமாறு வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அக்கரை கடற்கரை சுற்றுலா மையம் கடந்த 2016 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. Read more

parliamentமாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நேற்றையதினம் மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 37 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையென, சட்டமா அதிபர் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய அறிவுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

mexico earth quakeமெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 119 பேர் வரை பலியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின. Read more

sdfdsஇலங்கையிலுள்ள ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டிமிட்ரி மஹய்லோவஸ்கி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை கடற்படை தலைமையகத்தில் நேற்று சந்தித்துள்ளார்.

கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பு மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டார். இச் சந்திப்பில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. Read more

crime sceneயாழ்ப்பாணம் நல்லூர் வீதி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, மற்றொருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவு நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டுப் பேர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் யாழ்ப்பாணம் – நாவலர் வீதிப் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனுமே தாக்கப்பட்டுள்ளனர். இதன்போது, 38வயதான செல்வநாயகம் ரத்னபாலசிங்கம் என்பவர் பலியாகியுள்ளதோடு, அவரது மகனான ரத்னபாலசிங்கம் ரஜீவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more

yogeswaranஅரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள பங்களாளிக் கட்சிகளிடையே தீர்க்கமான முடிவில்லாத காரணத்தினால் தான், கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். 

இந்த குழப்பத்தின் வெளிப்பாடுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறுதிப் பெரும்பான்மை கொண்ட வட மாகாண சபையினால் நிராகரிக்கப்பட்ட 20வது திருத்த சட்டத்தை கிழக்கு மாகாண சபையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரித்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார். Read more

hisbullaகிழக்கின் முதலமைச்சராக சிங்களவர் ஒருவர் வரவேண்டும் என நான் வலியுறுத்தியதாக அப்பட்டமான பொய் பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வடகிழக்கு இணைப்புக்கு எதிராக தான் கருத்துத்தெரிவித்து வருவதால் இவ்வாறான பொய்யான தகவல்களைப் பரப்பிஇ மக்களை குழப்பி தனக்கெதிராக சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை இது தொடர்பில் வெளியிட்ட விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. Read more

maithriமாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் இடம்பெறும்எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் இடம்பெறும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் இடம்பெறும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். Read more